190

யாப்பருங்கலக் காரிகை

 
  வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி
முயலா தாரே.'
 
     இதனுள் 'வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாதார்' என்னும்
இறுதிச் சொல், இடையும் முதலும் சென்று பொருள் கொண்டமையால் 'அளைமறி
பாப்புப் பொருள் கோள்.'
 

(8) தாப்பிசைப் பொருள்கோள்

     இனி, தாப்பிசைப் பொருள்கோள் வருமாறு :
 
'உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.'

(குறள், 255)
 

     'இதனுள் ஊன் உண்ணாமை யுள்ளது உயிர்நிலை' எனவும் 'ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு' எனவும் நடுநின்ற 'ஊன்' என்னும் சொல் முன்னும்
பின்னும் பொருள் கொண்டமையால் (37) தாப்பிசைப் பொருள்கோளாயிற்று.
 

(9) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

     இனிக் கொண்டு கூட்டுப் பொருள்கோள் வருமாறு :
 

இன்னிசை வெண்பா

'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்.'
 
     இதனுள், 'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண் கோழி முட்டை
யுடைத்தன்ன மாமேனிப் பசலை' எனவும், 'அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்' எனவுஞ்
சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் (38) கொண்டு கூட்டுப்
பொருள்கோளாயிற்று.
 

     (37) தாப்பிசைப் பொருள் கோள் - கயிற்றினாற் கட்டப்பட்ட ஊசல் போன்ற
பொருள் கோள். அணியிலக்கண வகையுள் இது இடைநிலைத் தீவகத்தின்பாற் படும்.


      (38) ஓரடியுள் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது சுண்ண மொழி மாற்று;
 ஈரடிகளில் மொழிகளை மாற்றிப் பொருள்கொள்வது; அடிமொழிமாற்று;