192

யாப்பருங்கலக் காரிகை

 
  'எழுத்த லிசையன அசையொடு சீர்க்கண்
நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே'
 
என்றார் ஆகலின்.
 

(9) ஒப்பு

     இனி, 'ஒப்பும்' என்பது மேற் சீரும், தளையும், அடியும், வரை யறுக்கப்பட்ட
பாவும், பாவினமும் சொன்ன பெற்றியிற் றிரிந்து மிக்குங் குறைந்தும் வந்தாலும்
அவற்றை ஒரு புடை ஒப்புமை நோக்கி 36அவ்வச் செய்யுட்களின் பாற்படுத்தி
அப்பெயரானே வழங்கப்படும் எ - று.
 

வரலாறு

'(42) கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியு 37மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.'
 
     மேல் நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்று வரையறத்துச் சொன்னார்
(கா. 33); இஃது ஐந்தடியான் வந்த தாயினும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக்
கலிவிருத்தத்தின் பாற்படுத்தி வழங்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும்
இழுக்காது. இஃது அவினயனார் காட்டியது.
 
  'சுற்றுநீர் சூழ்கிடங்கிற்
பொற்றாமரைப் பூம்படப்பைத் தெண்ணீர்
நல்வய லூரன் கேண்மை
அல்லிருங் கூந்தற் கலரா னாதே.'
 
     மேல் வஞ்சிப்பாவுக்கு மூன்றடிச் சிறுமை என்று வரையறுத்துச் சொன்னார் (கா.
14); இஃது இரண்டடியான் வந்ததாயினும் ஒரு புடை ஒப்புமை நோக்கி வஞ்சிப்பாவின்
பாற்படுத்து வழங்கப்படும் எ - று. வஞ்சிப்பா இரண்டடியானும்
 

     (42) குக்கில் - செம்போத்து என்னும் பறவை. தாழியுள் நீலம் - சட்டியில்
வளர்க்கும் குவளை. அறிவன் - அருகபரன். கூழை - கூந்தல்.
 

     (பி - ம்.) 36. ஒழிந்த செய்யுட்களின் பாற்படுத்தி வழங்கப். 37. மாடுவா.