ஒழிபியல் 'பொருளோ டடிமுத' | 193 | | வரப்பெறும் என்று சொன்னார் ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க. பிறவும் புராண கவிஞராற் சொல்லப்பட்ட இலக்கியங்களை இவ் விலக்கணத்தால் ஒரு புடை ஒப்புமை நோக்கி மிக்கதனால் பெயர் கொடுத்து வழங்கப்படும் எ - று. இனி, ஒப்பும் என்ற உம்மையால் வண்ணமும், புனைந்துரையும், அடி இன்றி நடப்பனவும், ஓரடியான் நடப்பனவும் ஆமாறு உரைத்துக் கொள்க. | வண்ணம் | அவற்றுள் வண்ணம் நூறு திறத்தன. அவை வருமாறு : தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்று இவ் வைந்தினையும் முதல் வைத்து, அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்று இந்நான்கினையும் இடை வைத்து, குறில் வண்ணம், நெடில் வண்ணம், வலி வண்ணம், மெலி வண்ணம், இடைவண்ணம் என்று இவ்வைந்தினையும் கடை வைத்துக் கூட்டியுறழ நூறு வண்ணமும் பிறக்கும்; என்னை? | | 'தூங்கேந் தடுக்கல் பிரிதன் மயங்கிசை வைத்துப் பின்னும் பாங்கே யகவ லொழுகல் வலிமெலி பாற்படுத்தியுட் டூங்கே குறினெடில் வல்லிசை மெல்லிசை யோடிடையுந் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே' | | என்றார் ஆகலின். அவை உறழுமாறு : | தூங்கிசை வண்ணம் - 20 | குறிலகவற் | றூங்கிசை | குறில் வல்லிசைத் | தூங்கிசை | நெடிலகவற் | '' | நெடில் வல்லிசைத் | '' | வலியகவற் | '' | வலி வல்லிசைத் | '' | மெலியகவற் | '' | மெலி வல்லிசைத் | '' | இடையகவற் | '' | இடை வல்லிசைத் | '' | குறிலொழுகற் | '' | குறின் மெல்லிசைத் | '' | நெடிலொழுகற் | '' | நெடின் மெல்லிசைத் | '' | வலியொழுகற் | '' | வலி மெல்லிசைத் | '' | மெலியொழுகற் | '' | மெலி மெல்லிசைத் | '' | இடையொழுகற் | '' | இடை மெல்லிசைத் | '' | |
|
|