| மயங்கிசை வண்ணம் - 20 |
| குறிலகவன் | மயங்கிசை | குறில் வல்லிசை | மயங்கிசை |
| நெடிலகவன் | '' | நெடில் வல்லிசை | '' |
| வலியகவன் | '' | வலி வல்லிசை | '' |
| மெலியகவன் | '' | மெலி வல்லிசை | '' |
| இடையகவன் | '' | இடை வல்லிசை | '' |
| குறிலொழுகன் | '' | குறின் மெல்லிசை | '' |
| நெடிலொழுகன் | '' | நெடின் மெல்லிசை | '' |
| வலியொழுகன் | '' | வலி மெல்லிசை | '' |
| மெலியொழுகன் | '' | மெலி மெல்லிசை | '' |
இடையொழுகன் | '' | இடை மெல்லிசை | '' |
இவ் வண்ண விகற்பம் ஓதினார் 38கையனார் முதலாகிய ஒரு சாராசிரியர் எனக் கொள்க. இனித் தொல்காப்பினார் வண்ணம் இருபதென் றோதினார். என்னை? |
| | 'வண்ணந் தானே நாலைந் தென்ப.'
'அவைதாம்,
பாஅ வண்ணந் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் இயைபு வண்ண மளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ண மொரூஉ வண்ணம் எண்ணு வண்ண மகைப்பு வண்ணம் தூங்கல் வண்ண மேந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென் றாங்கவை யென்ப வறிந்திசி னோரே.' | |
(தொல். பொருள். சூ. 524, 25.) |
இவ் வண்ண விகற்பம் எல்லாம் தொல்காப்பியத்துள்ளும், யாப்பருங்கல விருத்தியுள்ளும் கண்டுகொள்க. |
|
(பி - ம்.) 38. அவிநயனார். |