புனைந்துரை |
இனி, புனைந்துரை இரண்டு வகைப்படும், பெரியதனைச் சுருக் கிச் சொல்லுதலும், சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் என என்னை? |
| `உரைக்கப் படும்பொருட் கொத்தவை யெல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை 39யாகும்ழு |
என்றார் ஆகலின். |
வரலாறு |
நேரிசை வெண்பா |
| `அடையார்ப்பூங் கோதையாட் கல்குலுந் தோன்றும் புடையார் வனமுலையுந் தோன்றும் - இடையாதும் 40கண்கொள்ளா வாயினுங் காரிகை நீர்மையாட் குண்டாக வேண்டு நுசுப்பு.ழு |
இது (43) பெரியதனைச் சுருக்கிற்று. |
நேரிசை வெண்பா |
| (44) `அவாப்போ 41லகன்றத னல்குன்மேற் சான்றோர் உசாப்போல வுண்டே மருங்குல் - உசாவினைப் பேதைக் குரைப்பான் பிழைப்பிற் பெருகினவே கோதைக்கொம் பன்னாள் குயம்.ழு |
இது சிறியதனைப் பெருக்கிற்றும் பெரியதனைச் சுருக்கிற்றும். இதனுள் `சான்றோர் உசாப்போல வுண்டே மருங்குல்ழு என்பது பெரியதனைச் சுருக்கிற்று. அல்லன சிறியதனைப் பெருக்கின. |
|
(43) உளதாகிய இடையை, `கண் கொள்ளாழு என்றமையால் பெரியதனைச் சுருக்கிற்று. (44) அல்குலின் பரப்புக்கு ஆசையின் பரப்பைக் கூறியது சிறியதனைப் பெருக்கிற்று. உசா - ஆராய்ச்சி. ஆராய்ச்சியைப் பேதைக்கு உரைப்பவனுக்குப் பிழை பெருகும். `குயம் பிழைப்பிற் பெருகினவேழு என்பதும் சிறியதனைப் பெருக்கிற்று. நுட்பமான ஆராய்ச்சி இடைக்கு உவமை. |
|
(பி - ம்.) 39. யென்ப. 40. கண்டுகொளாதாயினுங். 41. லகன்றதேயல் குலுஞ் சான்றோர் |