ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

197

 
  '(45) பொன்மலி கச்சி பூமலி கூடல்
மாரி யீகை மணிமாடம்'
 
     இவை சிறியதனைப் பெருக்கின.

      அடியின்றி நடப்பனவும் ஓரடியால் நடப்பனவும்

      இனி அடியின்றி நடப்பன பாட்டும், உரையும், நூலும், மந்திரமும், (46) பிசியும்,
முது சொல்லும், அங்கதமும், வாழ்த்தும் முதலாயினவெனக் கொள்க. என்னை?
 
  'உரையு நூலு மடியின்றி நடப்பினும்
வரைவில வென்ப வாய்மொழிப் புலவர்'

'வாய்மொழி பிசியே யங்கத முதுசொலென்
றாயவை நான்கு மன்ன வென்ப.'
 
     பாட்டும் உரையும் நூலும் மந்திரமும் பிசியும் முது சொல்லும் அங்கதமும்
என்றிவை பிறவும் ஓரடியானும் பலவடியானும் வரப் பெறு மெனக் கொள்க. என்னை?

 
  'செயிர்தீர் செய்யுட் டெரியுங் காலை
அடியி னீட்டத் தழகுபெற் றியலும்'

'ஓரடி யானும்வந் தொரோவிடத் தியலும்'

'அவை தாம்.

பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
முதுசொ லங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆகு மென்ப வறிந்திசி னோரே'
 
என்றார் ஆகலின்.
     இவை அடியின்றி நடப்பனவும் ஓரடியால் நடப்பனவுஞ் சொன்னவாறு.

(8)


     (45) கச்சி, கூடல், ஈகை, மாடம் இவற்றைப் புனைந்துரை வகையாற் பெரிதும்
புகழ்தலின் சிறியவற்றைப் பெருக்கின.

     (16) பிசி - பிதிர். முதுசொல் - பழமொழி. அங்கதம் - வசை.

_ _ _