காரிகை நுதலிய பொருளும் தொகையும் | | 44. எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந் திழுக்கி லடிதொடை 1நாற்பதின் மூன்றைந்து பாவினமூன் றொழுக்கிய வண்ணங்க ணூறொன்ப தொண்பொருள்கோளிருமூ வழுக்கில் விகாரம் வனப்பெட்டி யாப்புள் வகுத்தனவே. | இ.....கை இந்நூல் வகுத்த பொருளெல்லாம் தொகுத்து உணர்த்...று. எழுத்துப் பதின்மூன்றாவன : (1) குற்றெழுத்தைந்து, (2) நெட்டெழுத்தேழு, (3) உயிரெழுத்துப் பன்னிரண்டு, (4) குற்றியலுகர வெழுத்து நாற்பத்திரண்டு, (5) குற்றியலிகர வெழுத்து நாற்பத்து மூன்று, (6) ஐகாரக் குறுக்க வெழுத்து மூன்று, (7) ஆய்தவெழுத்து ஆறு, (8) மெய்யெழுத்துப் பதினெட்டு, (9) வல்லின வெழுத்து ஆறு, (10) மெல்லின வெழுத்து ஆறு, (11) இடையின வெழுத்து ஆறு, (12) உயிர் மெய்யெழுத்து இருநூற்றொருபத்தாறு, (13) அளபில் உயிரளபெடை யெழுத்து இருபத்தெட்டு, ஒற்றளபெடை யெழுத்து இருபத்திரண்டு. ஆக எழுத்துப் * பதின் மூன்று. | இரண்டசை யாவன : (1) நேரசை, (2) நிரையசை என இவை. சீர் முப்பதாவன : 2ஆசிரிய வுரிச்சீர் நான்கும், வெண்பா வுரிச்சீர் நான்கும், வஞ்சியுரிச்சீர் நான்கும், பொதுச்சீர் பதினாறும், ஓரசைச் சீர் இரண்டும் என இவை. தளை ஏழாவன : (1) நேரொன்றாசிரியத் தளை, (2) நிரை யொன்றாசிரியத்தளை, (3) இயற்சீர் வெண்டளை, (4) வெண்சீர் வெண்டளை, (5) கலித்தளை, (6) ஒன்றிய வஞ்சித்தளை, (7) ஒன்றாத வஞ்சித்தளை என இவை. |
| * இவ்வாசிரியர் யாப்பருங்கலத்தில் ஒளகாரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், மகரக் குறுக்கம் என்ற மூன்றனையும் இப்பதின்மூன்றனோடுங் கூட்டி எழுத்துப் பதினைந்து என்பர். | | (பி - ம்.) 1. நாற்பத்து. 2. ஈரசைச்சீர் நான்கும், மூவசைச்சீரெட்டும்' நாலசைச்சீர் பதினாறும். | |
|
|