| | ['நெடில்குறி றனியா நின்றுமொற் றடுத்தும் நடைபெறு நேரசை நால்வகை யானே' 'குறிலிணை குறினெடி றனித்துமொற் றடுத்தும் நெறிமையி னான்காய் வருநிரை யசையே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 6, 8,)] |
'வேய்புரையும் மென்தோளி' எ-து. மகடூஉ முன்னிலை. |
'உதாரணம் ஆழி வெள் வேல் வெறியே சுறா நிறம் விண்தோய் விளாம் என்று வேண்டுவரே' எ-து. நேரசைக்கு உதாரணம் ஆ, ழி, வெள், வேல் எனவும், நிரையசைக்கு உதாரணம் வெறி, சுறா, நிறம், விளாம் எனவும் சொல்லுவர் புலவர் எ-று.
|
(3) அகலம் உரையிற் கொள்க. அகலம் எனினும் விரித்துரை எனினும் ஒக்கும். என்னை? |
| | அகல மென்ப தாசறக் கிளப்பின் விகல மின்றி விரித்துரைப் பதுவே' |
என்றார் ஆகலின். |
'விண்டோய் விளாம்' என்று சிறப்பித்தவதனால் நேரசை ஓரலகு பெறும்; நிரையசை ஈரலகு பெறும் எனக் கொள்க. |
| வரலாறு |
ஆ - எனத் தனிநெடில் நேரசை ஆயினவாறு; ழி - எனத் தனிக்குறில் நேரசை ஆயினவாறு; வெள் - எனக் குற்றெழுத்து ஒற்றடுத்து நேரசை ஆயினவாறு; வேல் - என நெட்டெழுத்து ஒற்றடுத்து நேரசை ஆயினவாறு; வெறி - எனக் குறில் இணைந்து நிரையசை ஆயினவாறு; சுறா - எனக் குறினெடில் இணைந்து நிரையசை ஆயினவாறு; நிறம் - எனக் குறில் இணைந்து ஒற்றடுத்து நிரையசை ஆயினவாறு, விளாம் - எனக் குறினெடில் இணைந்து ஒற்றடுத்து நிரையசை ஆயினவாறு |
|
(3) அகலம் - விருத்தியுரை; என்றது யாப்பருங்கல விருத்தியை; 12-ஆங் காரிகை யுரையுள்ளும் இங்ஙனமே கூறுவர்; பலவிடங்களில் இங்ஙனமன்றி 'அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.' என்றும் கூறுவர். |