னால் பொருள்கோள் ஒன்பதல பல * என்பாரும் உளர் எனக் கொள்க. |
'வழுக்கில் விகாரம்' என்று சிறப்பித்தவதனால் (1) எழுத்துக் குற்றம், (2) சொற்குற்றம், (3) பொருட் குற்றம், (4) யாப்புக் குற்றம், (5) அலங்காரக் குற்றம், (6) ஆனந்தக் குற்றம் என்னும் இவ்வாறு குற்றமும் படாமற் சொல்லப்படுவன செய்யுட்கள் எனக் கொள்க.
3 எழுத்துக் குற்றமாவது எழுத்ததிகாரத்துடனே மாறு கொள்வது. |
வரலாறு |
வெண்பா |
| '? வெறிகமழ் தண்சிலம்பின் வேட்டமே யன்றிப் பிறிதுங் குறையுடையான் போலுஞ் - செறிதொடீஇ தேமா னிதணத்தேம் யாமாக நம்புனத்து வாமான்பின் வந்த மகன்.' |
இதனுள் 'தேமா' எனற்பாலதனைத் 'தேமான்' என்று னகர வொற்றுக் கொடுத்தமையால் எழுத்துக் குற்றமாயிற்று. என்னை? |
| '? முன்னிலை நெடில மாவு மாவும் னம்மிகப் புணரு மியங்குதிணை யான' |
என்றார்4 அவிநயனார். |
|
(*) 'நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற், றவைநான் கென்ப மொழி புண ரியல்பே' (தொல். எச்ச. 8) என நான்காகவும், 'பூட்டுவிட் விதலை யாப்புக் கொண்டுகூட், டொடுசிறை நிலையே பாசி நீக்கமென், றாக்கிய வைந்தும் பொருள் கோளாகும்' (இறையனார் அகப். உரை) 'என ஐந்தாகவும் 'யாற்றுநீர் மொழி மாற்று நிரனிறை விற்பூண், தாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே' (நன். சூ. 410) என எட்டாகவும் கூறுவர். ? சிலம்பு - மலை. இதண் - பரண். வாவும்மான் - தாவுகின்ற மான். ? இயங்குதிணை - அசையும் பொருள். முன்பாட்டில் நிலைத்திணைப் பொருளாகிய மாமரத்தை னகரச்சாரியை கொடுத்து 'தேமான்' என்றது எழுத்துக் குற்றம். |
|
(பி - ம்.) 3. அவற்றுள், எழுத்துக் குற்ற முதலிய வைத்தும் அவ்வவ் விலக்கண நூல்களால் அறிந்துகொள்க. இனி ஆனந்தக். 4. ஆகலின். |