சொற்குற்றமாவது சொல்லதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை? |
| 'சொல்லின் வழுவே சொல்லோத்து மரபிற் சொல்லிய குற்றந் தோன்ற லாகும்' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
வெண்பா |
| * 'இசையெலாங் கொட்ட வெழிற்றானை யூர்ந்து வசையில்லா மன்னர்வந் தேத்த - மிசையும் அடிசில் பருகி யணியார்த்துப் போந்தான் கொடிமதிற் கூடலார் கோ.' |
இதனுள், 'இசையெலாம் ஆர்ப்ப' எனவும், 'தானை நாப்பண்' எனவும், 'அடிசில் அயின்று' எனவும், 'அணி அணிந்து' எனவும் இவ்வாறு பொதுவினால் எடுத்துக் காட்டிப் பொதுவினால் முடிக்கற் பாலனவற்றைச் சிறப்பு வினையால் ஒன்றற்குரிய சிறப்பு வினை புணர்த்தமையாற் சொற்குற்றமாயிற்று. என்னை? |
'வேறுவினைப் பொதுச்சொ 5லொருவினை கிளவார்' என்றார் ஆகலின் (தொல். சொல். சூ. 46)
பொருட்குற்றமாவது : பொருளதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?
? 'பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே'என்றார் ஆகலின். |
|
* கொட்டுதல் தோற்கருவியை. ஊர்தல் கரியையும் பரியையும். பருகுவது நீர், பால் போன்ற பொருள்களை, ஆர்த்தல் கழல் போன்றவற்றை. அங்ஙனமாகப் பொதுவினால் எடுத்துக் காட்டப்பட்ட வற்றிற்குச்சிறப்பு வினைகளைத் தந்து முடித்ததனால் இப்பாட்டுச் சொற்குற்ற முடையதாகும்.
? அகமும் புறமுமாகிய பொருள் தமிழுக்கே உரியதாகலின் அதனைத் தமிழ்நடை' என்றார்' 'தமிழ்நெறி விளக்கம்' என்ற நூற்பெயரையுங் காண்க. |
|
(பி - ம்.) 5. லொரூஉ வினை. |