202

யாப்பருங்கலக் காரிகை

 

வரலாறு

வெண்பா

  * 'முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே
இன்னுந் தொழத்தோன்றிற் 6றேயதுகாண் - மன்னும்
பொருகளிமால் யானைப் 7புகார்க்கிள்ளி பூண்போற்
பொருகொளியான் மிக்க பிறை.'
 
இது நாண நாட்டம்.
 

வெண்பா

? 'பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட்
கண்டிக் களிற்றை யறிவன்மற் - றிண்டிக்
கதிரவன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிர முடைத்திதன் கோடு.'
 
இது நடுங்க நாட்டம்.
 
     இதுவும் பொருளதிகாரத்தோடு மாறுகொண்டமையாற் பொருட்குற்றமாயிற்று.
என்னை?
 
  'நாணவு நடுங்கவு 8நாடா டோழி
காணுங் காலைத் தலைமக டேத்தே'
 
என்றார் ஆகலின்.
 

நேரிசை யாசிரியப்பா

  ? 'வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை
கோழிலை வாழைக் கொழுமட லுறங்கும்
 

     * நாண நாட்டம் - தலைவி நாணும்படி தோழி அத் தலைவிக்குத் தலைவன்
பாலுள்ள உறவை ஆராய்தல். கன்னிப்பெண்கள் பிறை தொழுதல் மரபு களவிற்
றலைமகனைச் சேர்ந்த தலைவி பிறையைத் தொழாள். மேற்கவியில் 'பிறை இன்னுந்
தொழத் தோன்றிற்றே' என்று தோழி குறிப்பித்தது நாண நாட்டமாம்.

      ? 'களவில் வந்து செல்லும் நம் தலைவனுக்கு இக்களிற்றால் துன்பம்
விளைந்ததோ' என்று தலைவி அஞ்சி நடுங்கும்படி தோழி 'களிற்றின் கோடு உதிர
முடைத்து' என்றமையின் இது நடுங்க நாட்டம்.

      ? 'வாளை மேய்ந்த' என்றதும், 'தேரை வாலினும் பெரிதாகின்று' என்றதும்
பொருள் மாட்சி யற்ற தொடர்களாம்.

 

     (பி - ம்.) 6. றீதேகாண். 7. புகழ்க்கிள்ளி. 8. நாட்டுழி யிடத்துக்..... டொக்கே.