ஒழிபியல் 'எழுத்துப் பதின்மூன்'

203

 
9ஊரன் செய்த கேண்மை
தேரை வாலினும் 10பெரிதா கின்றே.'
 
     இதுவும் பொருள் 11மாண்ட தின்மையாற் பொருட்குற்றம்.

     யாப்புக் குற்றமாவது : யாப்பதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?
 
  'யாப்பின் வழுவே யாப்பின திலக்கணங்
12கோப்பின் வாராக் கோவைத் தாகும்'
என்றார் ஆகலின்.
 

வரலாறு

'கானக நாடன் 13கடுங்கோன் பெருமலைமேல்
ஆனை கிடந்தனபோ லாய பெருங்கற்கள்
தாமே கிடந்தன கொல்லோ வவற்றைப்பெற்றிப்
பிறங்கவைத் தாரு முளர்கொல்லோ.'
     இது முதலெடுத்துக் கொண்ட ஓசையிற் கெட்டுப் பாவிகற்பக் * கட்டுரையான்
வந்தமையால் யாப்புக் குற்றமாயிற்று.

     அலங்காரக் குற்றம் வருமாறு :
 

வெண்பா

  'வெண்டினங்கள் போன்றிலங்கு வெண்சங்கு 14வெண்சங்கம்
விண்டன்ன தாழை வளர்தொடு - கொண்டெங்கும்
கள்ளாவி நாறுங் கருங்கழிசூழ் கானத்தெம்
உள்ளாவி வாட்டு முருவு.'
 
     இதனுள், 'வெண்டிங்கள் போலும் சங்கு, சங்கு போலும் தாழைப்பூ' என்று
உவமைக்கு உவமை சொன்னமையால் அடுத்து வரல் உவமை என்னும் அலங்காரக்
குற்ற மாயிற்று. என்னை?
 

     * கட்டுரை - வசனம்.

     (பி - ம்.) 9. சோழ நாடன் கேண்மை. 10. போதாதன்றே.11. தீர்ந்த தின்மையாற்,
திரண்ட தின்மையாற். 12. கோப்ப வாராக் கொள்கைத். 13. கடுங்கோட்டுப்.
14. சங்கனைய, வண்டிலங்கு.....விண்டெங்கும்.