| 'அடுத்துவர லுவமை யில்லென மொழிப' |
என்றார் ஆகலின். |
இனி ஆனந்தக் குற்றம் வருமாறு : |
| [15 இயனெறி திரிந்த வெழுத்தா னந்தமும் சொன்னெறி திரிந்த சொல்லா னந்தமும் பொருணிலை திரிந்த பொருளா னந்தமும் தூக்குநிலை திரிந்த தூக்கா னந்தமும் தொடைநிலை திரிந்த தொடையா னந்தமும் நடையுறு புலவர் நாட்டிய வகையே' |
என்றார் ஆகலின்.] |
| * 'ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாந் தோழி துணையாத் 16துயர்தீரும் - வாழி நறுமாலை தாராய் திரையவோஒ 17வென்னும் செறுமாலை சென்றணைந்த போது.' |
இதனுள் 'திரையவோஒ' என்புழி இயற்பேர் சார்த்தி எழுத்து அளபெழுந்தமையால் எழுத்தானந்தம். என்னை? |
|
| 'இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே 18 இயற்பா டில்லா வெழுத்தா னந்தம்' |
என்றார் ஆகலின், இனிச் சொல்லானந்தம் வருமாறு : |
வெண்பா |
| ? 'என்னிற் பொலிந்த திவண்முக மென்றெண்ணித் தன்னிற் 19குறைபடுப்பான் றண்மதியம் - மின்னி விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசையன் எரிந்திலங்கு வேலி னெழும்.' |
|
* ஆழி இழைப்ப - தரையில் கூடலைக் கிழிப்பதனால். ? குறைபடுப்பான் - குறையை உண்டாக்கும் பொருட்டு. மதியம் வேலின் எழும். |
|
(பி - ம்.) 15. எழுத்தியறிரிந்த. 16. துயர்தீர்வன், துயில் தீரும். 17. வென்பன். 18. இயற்பட லில்லா. 19. குறைபடுவான். |