இதனுள், விசைய னென்னும் பாட்டுடைத் தலைமகன் மேல் எரிந்தென்னும் சொல்லேறப் புணர்த்தமையாற் சொல்லானந்த மாயிற்று. என்னை? |
| 'இயற்பெயர் மருங்கின் மங்கல மழியத் தொழிற்சொற் புணர்ப்பினது சொல்லா னந்தம்' |
என்றார் ஆகலின். இனிப் பொருளானந்தம் வருமாறு : |
வெண்பா |
| 'இந்திரனே போலு மிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமே போன்றுளது மல்லாகம் - மந்தரத்திற் றாழருவி போன்றுளது தார்மாலை யம்மாலை ஏழுலகு நாறு மிணர்.' |
இதனுள் இளஞ்சாத்தன் என்னும் கீழ்மகனை அரசரை உவ மிக்குமாறு போலப் * பரிக்கலாகா வண்ணம் இறப்ப உயரச் சொன்னமையால் இறப்ப உயர்ந்த பொருளானந்தம். |
| ? 'கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி அருவிடர் வீழ்ந்தென' |
இதனுள் ஐந்திணைக்குரிய பொருளை இறப்ப இழிவுபடச் சொன்னமையால் இறப்ப விழிந்த பொருளானந்தம். என்னை? |
|
| 'இறப்ப வுயர்ந்தது மிறப்ப விழிந்ததும் அறத்தக வழீஇய வானந் தம்மே' |
என்றார் ஆகலின்,
பிற ஆனந்தங்களும் வந்தவழிக் கண்டுகொள்க.
இனி, எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் வருமாறு : |
நேரிசை யாசிரியப்பா |
| 'தாமரை புரையுங் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் |
|
* பரிக்கலாகர வண்ணம் - தாங்க முடியாதபடி.
? இவை மலைபடு கடாம். 311 - 12 - இன் பாடபேதம். யா. வி. பக். 520. பார்க்க. குறிஞ்சியின் கருப் பொருளாகிய குரங்குக்கு விடரில் விழுதல் இழிவாதல் பற்றி இது இறப்ப விழிந்த பொருளானந்தமாயிற்று. |