| குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின் நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் கெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைக லெய்தின்றா லுலகே.' |
(குறுந். கடவுள்.) |
ஒழிபியலோத்து முற்றும். |
யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரைப்பாடமும் முற்றும். |
_ _ _ |
ஒழிபியல் (*) முதனினைப்புக் காரிகை |
| சீருந் தளையுடன் விட்டிசை மாஞ்சீ ரியத்றளைதேர் வாரு மருகிக் கலியே வருக்க நெடில்சுருங்கிற் றோரும் பொருளோ டடிமுத லாவெழுத் தொன்பதுவென் றாருந் தெளிந்த வொழிபியற் சூத்திர மாகியதே. |
(*) ஒழிபியல் முதனினைப்புக் காரிகை பிரதிதோறும் கீழ்வருமாறு வேறுபட்டுள்ளது. |
கலித்துறை |
| 'சீரொடு விட்டிசை மாஞ்சீ ரியற்றளை சேர்ந்தருகி வாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளும் சீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமென்றே யாரு மொழிபியற் பாட்டின் முதனினைப் பாகுமன்றே.' |
அடிவர வாசிரியம் |
| 'சீரும் விட்டிசை மாஞ்சீ ரியற்றளை அருகி வருக்கஞ் சுருங்கிற் பொருளோ டெழுத்தென வொன்பா னொழிபிய லொத்தே' |