இனி அவற்றுக்குச் செய்யுள் வருமாறு : |
| '(4) போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே.' |
இது (5) நேரசை நான்கும் வந்த செய்யுள். |
| '(6) 1அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய 2மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.' |
இது (7) நிரையசை நான்கும் வந்த செய்யுள். |
| 'குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரு நிரையு 3மென்றிசிற் பெயரே' |
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 315.) |
| '(8) கோழி வேந்த னேரசை நிரையசை யாழ்புனல் 4வாழ்க்கை வெறிசுறா நிறங்குரால்' |
என்று உதாரணம் எடுத்தோதினாரும் உளரெனக் கொள்க. |
'குறிலே நெடிலே' என்னும் இக்காரிகை தன்னையே இலக் கியமாக அலகிடினும் இழுக்காதெனக் கொள்க. |
(5) |
|
(4) போது - மலர், சாந்தம் - சந்தனம். பொற்ப - பொலிவுபெற, ஆதிநாதன் - முதல் தீர்த்தங்கரர். (5) நேரசை நான்காவன: குறிலும் நெடிலும் தனித்து வருவன இரண்டு, ஒற்றொடு வருவன இரண்டு. (6) வரதன் - அருகபரன், பவம் - பிறப்பு, பரிசு அறுந்தல் - பெருமையை அழித்தல், பணிபவர் பிறப்பின் பெருமையை அழிப்பவர். (7) நிரையசை நான்காவன : குறிலிணையும் குறினெடிலும் தனித்து வருவன இரண்டு, ஒற்றொடு வருவன இரண்டு. (8) ஆ, ழி, வெள், வேல் - வெறி, சுறா, நிறம், விளாம் என்று இவ்வாசிரியர் காட்டியவாறு கோழி வேந்தன்....குரால் என்று பிறசொற்களை உதாரணம் காட்டினாரும் உளர் என்பதற்கு. இது மேற்கோள். கோ - ழி : வேந் - தன் - இந்நான்கும் நேரசை. வெறி சுறா; நிறம் - குரால் - இந்நான்கும் நிரையசை. |
|
(பி - ம்.) 1. அணிகிளரசோ. 2. மணி நிழ லவி. 3. மென்றிசி னோரே. 4. வேட்கை. |