22

யாப்பருங்கலக் காரிகை

 

சீர்

 

6. ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்
நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யானிறுப
வாரசை மென்முலை மாதே 1வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
ஓரசை யேநின்றஞ் சீராம் பொதுவொரு நாலசையே.
 
     இ - கை. அவ்வசைகளாலாகிய (1) சீர்களது பெயர் வேறுபா டுணர்த்.....று.
 
     'ஈரசை நாற்சீர் அகவற்கு உரிய' எ-து. (2) இரண்டசையின் ஆகிய நான்கு சீரும்
ஆசிரிய வுரிச்சீர் எனப்படும் எ-று.
 
     அகவல் எனினும் ஆசிரியம் எனினும் ஒக்கும். என்னை?
 

 
'அகவ லென்ப தாசிரியப் 3பாவே'
என்றார் ஆகலின்.
     'வெண்பாவினவாம் நேரசையால் இற்ற மூவசைச்சீர்' எ - து. (4) நேரசை
இறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் எனப்படும் எ-று.
 
     'நிரையான் இறுப வகுத்த வஞ்சிக்கு உரிச்சீர்' எ - து. (5) நிரையசை இறுதியாகிய
மூவசைச்சீர் நான்கும் வெண்பா வஞ்சி யுரிச்சீர் எனப்படும் எ-று.
 
     'வார் அசை மென்முலை மாதே' எ - து. மகடூஉ முன்னிலை.
 
     'ஓரசையே நின்றும் சீராம்' எ-து. ஒரோவிடத்து நேரசை
 

     (1) முறியாத சொல் சீராக வருவது சிறப்புடைச்சீர்; முறிந்தசொல் சீராக வருவது
சிறப்பில்சீர். 'போது - சாந்தம் - பொற்ப' - இவை சிறப்புடைச் சீர்கள் - 'பரிசறுப் -
பவரே' இவை சிறப்பில் சீர்கள்.

     (2) நான்காவன : நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்பவை.

     (3) இச்சூத்திரம் சங்கயாப்பு என்ற நூலைச் சேர்ந்தது: யா. வி. சூ. 27, 69, மேற்.

     (4) நேர் இறுதியாகிய மூவசைச்சீர் நான்காவன : நேர்நேர்நேர், நிரை நேர் நேர்,
நிரை நிரை நேர், நேர் நிரை நேர் என்பன.

     (5) நிரை இறுதியாகிய மூவசைச்சீர் நான்காவன : நேர் நேர் நிரை, நிரைநேர்
நிரை, நிரைநிரைநிரை, நேர்நிரை நிரை என்பன.
 
     (பி - ம்.) 1. வருபவஞ். 2. பெயரே.