தானே நின்றும் சீராம்; நிரையசை தானே நின்றும் சீராம்; அவை (6) அசைச்சீர் எனப்படும் எ-று. |
'பொது ஒரு நாலசையே' எ - து. நாலசையினாலாகிய சீர் (7) பொதுச்சீர் எனப்படும் எ-று. |
'நான்கு' என்பதை எல்லாவற்றோடுங் கூட்டி (8) மத்திம தீப மாகப் பொருளுரைத்துக்கொள்க. |
| | 'ஈரசை கூடிய சீரியற் சீரவை ஈரிரண் டென்ப வியல்புணர்ந் தோரே' 'மூவசைச் சீருரிச் சீரிரு நான்கினுள் நேரிறு நான்கும் வெள்ளை யல்லன பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே' 'நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே' 'ஓரசைச் சீருமஃ தோரிரு வகைத்தே' |
| (யா. வி. சூ. 11-14.) |
| 'நாலசை யானு நடைபெறு (10) மோரசை சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே. |
என்றார் காக்கை பாடினியார். |
| (6) |
| ----- |
|
(6) இவ்வாசிரியர் யாப்பருங் கலத்தில் அசைச் சீரையும் பொதுச்சீர் என்பர் (சூ.14.) (7) சிறப்பின்மையின் பொதுச்சீர் என்று பெயர் பெற்றது! பொது. சிறப்பின்மையை அறிவிக்கும் சொல்; 'புலமிக் கவரைப் புலமை தெரிதல்......பொது மக்கட் காகாவாம்' (பழ.) (8) மத்திம தீபம்: ஒரு சொல் இடையிலே நின்று செய்யுளிற் பலவிடத்தும் நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவது. அணி வகைகளுள் இது தீவகவணியின் பாற்படும்; தண்டி. சூ. 40. (9) இது பல்காயனார் செய்தது என்று யாப்பருங்கல விருத்தியாற் றெரிகிறது; சூ. 13, மேற். (10) ஓரசைச் சீர் பெரும்பான்மையும் வெண்பாவின் இறுதிக் கண்ணும் அம்போதரங்க உறுப்பின் இறுதிக் கண்ணும், வஞ்சி விருத்தம் முதலியவற்றின் இடையிலும் வரும். |