சீர்களின் வாய்பாடு. |
| 7. தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குன் மாதே 1வருபவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே. |
இ - கை. முறையானே (1) முதல் நான்கு சீர்க்கும் உதாரணம் ஆமாறுணர்த்....று. |
'தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர் அகவற்கு ஆம்'. எ - து. நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை ஆகிய தேமா, புளிமா, கருவிளம் கூவிளம் என்னும் நான்கு சீரும் ஆசிரியவுரிச் சீர்க்கு உதாரணமாம் எ-று. |
'ஆம் கடை காய் அடையின் வெண்பாவிற்கு' எ - து அவற்றின் கடைக்கண், காய் என்னும் சொற்பெற்றுத் தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் எனவரும் நான்கு சீரும் வெண்பாவுரிச்சீர்க்கு உதாரணமாம் எ - று. |
'அந்தம் கனியா வருப வஞ்சிக்கு உரிச்சீர். எ - து. அவ் வீர சைச் சீரின் இறுதிக்கண், கனி என்னுஞ் சொற்பெற்றுத் தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என வரும் நான்கு சீரும் வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணமாம் எ-று. |
| 'வாமாண் கலையல்குன் மாதே' எ - து. மகடூஉ முன்னிலை. 'நாமாண் புரைத்த அசைச் சீர்க்கு உதாரணம் நாள் மலரே' |
எ - து. 'ஒரோ விடத்து ஆம்' என்று (2) உரைக்கப்பட்ட ஓரசைச் சீர்க்கு உதாரணம் நாள் என்பதூஉம், மலர் என்பதூஉம் ஆம் எ - று. நாள் என்பது நேரசைச்சீர்க்கு உதாரணம், மலர் என்பது நிரையசைச் சீர்க்கு உதாரணம். |
இதனுள் 2ஆம் என்பதனை 3எல்லாவற்றோங் கூட்டி மத்திம 4தீபமாக்கிப் பொருளுரைத்துக் கொள்க. |
|
(1) முதல் நான்கு சீர்: ஆசிரியவுரிச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், அசைச்சீர்; இம் முறை காரிகை 6-இல் கூறப்பட்டுள்ளது. (2) இங்ஙனம் முன் காரிகை உரையில் உரைக்கப்பட்டது. |
|
(பி - ம்.) 1. வகுத்தவஞ். 2. ஆமாம். 3. யெங்குமொட்டி 4. தீபமாகப். |