உறுப்பியல் 'தண்ணிழ றண்பூ'

25

 
  '(3) அம்ம் பவள்ள் வரிநெடுங்கண் ணாய்வஞ்சிக்
கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின்
அரும்ம் பவண்முலை யொக்குமே யொக்கும்
கரும்ம் பவள்வாயிற் சொல்'
என்னும் இப் பொய்கையார் வாக்கினுள் ஒக்கும் என்பதனை 5மத்திம தீபமாக வைத்து
எல்லாவற்றோடுங் கூட்டிப் பொருளுரைத்துக் கொண்டாற் 6போலக்கொள்க.
 

(7)


(3) இது செப்பலோசையிற் சிறிது வழுவி வந்த இன்னிசை வெண்பா ஆதலின
வெண்டுறையாகும்.


(பி - ம்.) 5. எங்குமொட்டிப்பொரு. 6. போல விதனுள் ஆமென்பதனையு
மெங்குமொட்டிப் பொருளுணர்ந்து கொள்க.
 

----

     பொதுச்சீருக்கு வாய்பாடும் அசைச்சீர் பொதுச்சீர்கட்குத்  தளைவழங்கு
முறைமையும்
 
8. தண்ணிழ றண்பூ நறும்பூ நறுநிழ றந்துறழ்ந்தால்
எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகு மினியவற்றுட்
கண்ணிய 1பூவினங் காய்ச்சீ ரனைய கனியொடொக்கும்
ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கு மொண்டளைக்கே.
 
     இ - கை. பொதுச்சீருக்கு உதாரணம் ஆமாறும் அவற்றது எண்ணும், பொதுச்சீரும்
அசைச்சீரும் செய்யுளகத்து வந்தால் தளை வழங்கும் முறைமையும் உணர்த்.....று.
 
     'தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்து உறழ்ந்தால் எண்ணிரு நாலசைச்
சீர்வந்து அருகும்' எ - து. தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கினோடு
தண்ணிழல், தண்பூ, நறும்பூ, நறுநிழல், என்னும் நான்கினையும் முறையானே
கொணர்ந்து உறழ்ந்தாற் பதினாறு நாலசைச்சீர்க்கு உதாரணமாம் எ - று.
 
     தேமா, புளிமா, கருவிளம் கூவிளம் என்பன (1) அதிகாரத்தால் வருவித்
துரைக்கப்பட்டன.
 

(1) அதிகாரமாவது : எடுத்துக்கொண்ட அதிகாரம் இது வாதலின் இச் சூத்திரத்துள்
அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தோடு பொருந்த
 

(பி - ம்.) 1. பூவிளகாய்ச்.