உறுப்பியல் 'தண்ணிழ றண்பூ'

27

 
      முதலசையோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும், ஒன்றாதது இயற்சீர்
வெண்டளையாகவும் 4வழங்கப்படும் எ - று.
 
     இயற்சீரெனினும் ஆசிரிய வுரிச்சீரெனினும் ஒக்கும். என்னை?
 
  '(2) இயற்சீ ரெல்லா மாசிரிய வுரிச்சீர்'
 
என்றார் ஆகலின்.
 
  'ஒண்டளைக்கே' எ-து. ஒள்ளிய தளை வழங்குமிடத்து எ - று.
ஒண்டளை என்பதனை (3) இறுதி 5விளக்காகக் கொள்க.
 
     'கண்ணிய பூவினம்' என்று சிறப்பித்த வதனால், வெண்பாவினுள் நாலசைச்சீர்
வாரா; ஆசிரியத் துள்ளுங் குற்றுகரம் வந்துழி யன்றி வாரா; கலியுள்ளும்
பெரும்பான்மையுங் குற்றுகரம் வந்தவழியன்றி வாரா; வஞ்சியுட் குற்றுகரம் வாராதேயும்
வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும்
பெறும்; அல்லனவற்றுட் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; (4) இரண்டு
வரினும் கண்ணுற்று நில்லா; 6பாவின்றுணைப் பாவினத்துட் பயின்று வாரா எனக்
கொள்க.
 
     'ஒண்ணிழற் சீர்' என்று சிறப்பித்தவதனால் நிழல் என்னுஞ் சொல் இறுதியாகிய
நிரையீற்றுப் பொதுச் சீர் எட்டும் வஞ்சியுள் அல்லது வாரா எனக் கொள்க.
 
  'நாலசை யானடை பெற்றன வஞ்சியுள்
ஈரொன் 7றிணைதலு மேனுழி யொன்றுசென்
றாதலு மந்த நிரையசை வந்தன
 

     (2) இது காக்கை பாடினியார் செய்த தென்பர் (யா. வி. சூ. 11, மேற்.)

      (3) இறுதி விளக்காவது ஒரு சொல் ஈற்றிலே நின்று செய்யுளிற் பல
விடங்களிலும் நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவது; இது தீவக
வணியின் பிரிவுகளுள் ஒன்று (தண்டி. சூ. 40;) கடைநிலைத் தீவகம் என்றும் வழங்கும்.

      (4) நாலசைச்சர் இரண்டு வரின் அவற்றை ஈரசைச்சீர் நான்காகக் கொண்டு
கணக்கிடுவர்; ஆதல் பற்றிக் 'கண்ணுற்று நில்லா' என்றார்.
 

     (பி - ம்.) 4. கொண்டு வழங்கப். 5. விளக்காகப் பொருளுரைத்துக்.
6. பாவினத்துள்ளும் பயின்று. 7. றணைதலு.