28

யாப்பருங்கலக் காரிகை

 
  கூறிய வஞ்சிக் 8குரியன வாகலும்
9 ஆகு மென்ப வறிந்திசி னோரே'
 
என்றார் காக்கை பாடினியார்.
 
     இனி 10ஒரு சாரார்'. வெண்பாவினுள் அளவெழுந்தால் 11நாலசைப் பொதுச்
சீர்வரு மென்பார் உளராயினும், அவ்வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டான்
ஓசையூட்டும் பொழுது, செப்பலோசை 12பிழைக்கு மென்பதூஉம், ஆண்டுச்
சீருந்தளையும் 13சிதைய வாராமையின் அளபெடுப்பனவும் அல்ல, அளபெடுப்பினும்
அளபெடைகள் (5) அலகு காரியம் 14பெறுவனவும் அல்ல வென்பதூஉங்
காக்கைபாடினியார் முதலிய தொல்லாசிரியர் துணிவு; அதுவே இந்நூ லுடையார்க்கும்
உடன்பாடு. (8)
 

     (5) இங்கே அலகு காரியம் பெறுதலாவது அவ்வளபெடையும் ஓரெழுத்தாகக்
கருதப்பெற்றுப் பிறிதொரு சீராக நிற்றல். காரிகை 36-இல் 'பல்லுக்குத் தோற்ற' என்ற
உதாரண வெண்பாவைக் காண்க.
 

     (பி - ம்.) 8. குணத்தன, குரைத்தன. 9. ஆகுநவென்ப. 10. யொருசார் 11.
நாலசைச்சீர். 12. யழிந்து பிழைக்கு. சிதையாமையான் அள 14. பெறுவனவல்ல.
 

----

சீர்கட்கு உதாரண முதற் குறிப்பு

9. குன்றக் குறவ ளகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்
கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப வோரைச்சீர்
நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்
கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங் கண் வானத்துமே.
 
     இ ....... கை. முறையானே ஐந்து வகைப்பட்ட சீரானும் வந்த இலக்கியங்கட்கு
முதனினைப்பு உணர்த்.....று.
 
     'குன்றக் குறவன் அகவல்' எ - து :
 
'(1) குன்றக் குறவன் காதன் மடமகள்
வரையர மகளிர் புரையுஞ் சாயலள்
 

     (1) வரையர மகளிர் - மலைகளிலே திரியும் தெய்வப் பெண்டிர். ஐயள் -
அழகுடையவள்; வியக்கத்தக்கவள் எனினுமாம். மார்பிற் சுணங்கினள்.