உறுப்பியல் 'குன்றக் குறவ'

29

 
  ஐய ளரும்பிய முலையள்
செய்ய வாயினண் மார்பினள் சுணங்கே.'

(ஐங்-255.)

     இந் நேரிசை யாசிரியப்பாவினுள் நான்கு ஆசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டு
கொள்க.

     'பொன்னாரம் வெண்பாட்டு' எ - து :
 
'(2) பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்
உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ
மனனோடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
புனனாடன் பேரே வரும்.'
 
     இந்நேரிசை வெண்பாவினுள் வெண்பாவுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டு
கொள்க.
     'வஞ்சிக்கு ஒன்றும் உதாரணம் பூந்தாமரை' எ - து:
 
'(3) பூந்தாமரைப் 1போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின் மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய 2மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
நாளும்
3மகிழ மகிழ்தூங் கூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே.'
 
     இக்குறளடி வஞ்சிப்பாவினுள் நான்கு வஞ்சியுரிச்சீரும் வந்தவாறு கண்டு கொள்க.
 
     'ஓரசைச்சீர் நன்றறிவாரிற் கயவரும் பாலொடு' எ-து :
 
'நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத் தவல மிலர்.'
 

(குறள், 1072.)
 


     (2) கிள்ளி - சோழன். ஊழ் - முறை. கோழி - உறையூர். மனனோடு வாய்
எல்லாம் நாடன்பேரே வரும்; நினைப்பும் சொல்லும் கூறப்பட்டன.

     (3) களவயின் - நெற்களத்தில். வினைக்கம்பலை - வேலை செய்யுங்கால் எழும்
ஒலி. சிலம்பல் - ஒலித்தல். வயலின் கம்பலைக்கு அயல். ஆனா - அமையாத.
 


     (பி - ம்.) 1. போஒ தலமர. 2. மணமுரசொடு. 3. மகிழும்.