30

யாப்பருங்கலக் காரிகை

 
     இக்குறள் வெண்பாவினுள் இலர் என நிரையசை சீராயினவாறு கண்டு கொள்க.
 
  'பாலொடு தேன்கலந் தற்றே 4பணிமொழி
வாலெயி றூறிய நீர்.'
 

(குறள், 1121.)
 

     இக்குறள் வெண்பாவினுள் நீர் என நேரசை சீராயினவாறு கண்டுகொள்க.
 
     'நாலசைச் சீர்க்கு அன்றதென்னார் அள்ளற் பள்ளத்தினோடு அங்கண்
வானத்துமே' எ - து.
 
  '(4) அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு
வேங்கைவாயில் 5வியன்குன்றூரன்'
 
என்னும் பழம் பாட்டினுள் 6நாலசைப் பொதுச்சீர் வந்தவாறு கண்டு கொள்க.
 
  (5) அங்கண்வானத் தமரரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தன் 7மங்கையருங்
கடிமலரேந்திக் 8கதழ்ந்திறைஞ்சக்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
9கொங்கிவரசோகின் 10கொழுநிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையு முக்குடைநீழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
 

     (4) அள்ளற் பள்ளம் - சேற்றை யுடைய வயல். வேங்கை வாயில் -
புதுக்கோட்டை யருகிலுள்ளதோர் ஊர்.

      (5) வடிவு - அழகு. கதழ்ந்து - அன்பு மிகுந்து. முக்குடை : சந்திராதித்தம்,
நித்த விநோதம், சகல பாசனம் என மூன்று குடைகள் அருகதேவருக்கு உண்டு.
வெங்கண் - கொடிய. விளிவு - அழிவு. அனந்த சதுஷ்டயம் : அனந்த ஞானம்,
அனந்த தரிசனம், அனந்த வீரியம் அனந்த சுகம் என்னும் நான்கின் கூட்டம். இதனை
சுத்தாத்ம ஸ்வரூபம், என்பர்; இதனை அடைதலே வீடுபேறு. ஆதி - அரூகபரன்,

     (பி - ம்.) 4. பனிமொழி. 5. வியன்குன்றுரே. 6. ஓரடியினுள் இரண்டு நாலசைச்சீர்
வந்தவாறு. இதனைக் குறளடி வஞ்சிப்பாவாக அலகிட்டுக்கொள்க. 7. மடமங்கையருங்.
8. கலந். 9. கொங்கவி.  10. குளிர் நிழற்கீழ்.