உறுப்பியல் 'குன்றக் குறவ'

31

 
  பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டய மவையெய்த
நனந்தலையுலகுட னவைநீங்க
மந்தமாருத மருங்கசைப்ப
வந்தரதுந்துமி நின்றியம்ப
விலங்குசாமரை யெழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதரஇனிதிருந்
தருணெறி நடாத்திய வாதிதன்
றிருவடி பரவுதுஞ் சித்திபெறற் பொருட்டே.'
     இக்குறளடி வஞ்சிப்பாவினுட் பொதுச்சீர் பதினாறும் அடிதோறும் முதற்கண்ணே
வந்தவாறு கண்டுகொள்க.
 
     இதனுள் நேரீற்றுப் பொதுச்சீர் எட்டும் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு
ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவுங் கொண்டு வழங்கப்படும்
எ-று. நிரையீற்றுப் பொதுச்சீர் எட்டும் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு
ஒன்றியதூஉம் ஒன்றாததூஉம் வஞ்சித்தளை என்று வழங்கப்படும். எ-று.
 
     இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும் உளரெனக்கொள்க.
என்னை?
 
இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும் உளரெனக் கொள்க. என்னை?
 
என்றார் காக்கைபாடினியார்.
 

     (6) 'குன்று கூதிர்.....செந்துறைச் செந்துறை': 'ஓங்கெழின் முதலாக், குன்று கூதிர்
பண்பு தோழி, விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாம், தெளிய வந்த செந்துறைச்
செந்துறை' என்னு மிதனுள் 'ஓங்கெழில்' என்பழி, 'ஓங்கெழி லகல்கதிர் பிதிர்துணி
மணிவிழ முந்நீர் விசும்பொடு பொருதலற' என்னும் பாட்டும், 'குன்று' என்புழி. ''குன்று
குடையாக் குளிர்மழை 'தாங்கினான்' என்னும் பாட்டும், 'கூதிர்' என்புழி,
''கூதிர்கொண்டிருடூங்கும்'' என்னும் பாட்டும், 'பண்பு' என்புழி, ''பண்புகொள்
செயன்மாலை'' என்னும் பாட்டும். 'தோழி' என்புழி, ''தோழி வாழி, தோழிவாழி,
வேழமேறி வென்ற தன்றியும்' என்னும் பாட்டும், விளியிசை' என்புழி, ''விளியிசைப்ப
விண்ஊக நடுங்க'' என்னும் பாட்டும்,