தளை |
| 10. 1தண்சீர் தனதொன்றிற் றன்றளை யாந்தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்துவல் லோர்வகுத்த வெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்டளையாம் ஒண்சீ ரகவ லுரிச்சீர் விகற்பமு மொண்ணுதசீலே |
இ....கை. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் தம்முள் ஒன்றுதலும் ஒன்றாமையுமாகிய (1) ஏழுதளையும் ஆமாறுணர்...று. |
'தண்சீர் தனது ஒன்றில் தன்தளையாம்' எ-து. தன்சீர் நின்று தனது வருஞ்சீர் முதலசையோடு (2) ஒன்றுவது தன்றளையாம் எ - று. |
எனவே, ஆசிரியவுரிச்சீர் நிற்ப ஆசிரியவுரிச்சீர் வந்து நேரா யொன்றுவது நேரொன்றாசிரியத்தளை; நிரையாயொன்றுவது நிரையொன்றாசிரியத்தளையாம் எ-று. வெண்பாவுரிச்சீர் நிற்பத்தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம் எ-று. வஞ்சியுரிச்சீர் நிற்பத் தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளையாம் எ - று. |
'தணவாத' என்று மிருத்துச் சொல்லியவதனால், தன் சீர் |
|
'முத்துறழ்' என்புழி, ''முத்துற ழகவந்தேங்கி'' என்னும் பாட்டும் குறிப்பினான் முதனின்ற மொழியான் அறியவந்தன, (நன். சூ. 268, மயிலை.) செந்துறைச் செந்துறை என்பது செந்துறை விரி மூன்றனுள் ஒன்று, மற்றவை வெண்டுறையும், வெண்டுறைச் செந்துறையுமாம். நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவையெல்லாம் செந்துறை எனப்படும். பாடற்கு ஏற்றது செந்துறையானாற்போல, ஆடற்கேற்றது வெண்டுறை எனப்படும். இவற்றின் விரிவை யாப்பருங் கலவிருத்தி ஒழிபியலிற் காண்க. |
---- |
(1) தளைக்கப்படுவது தளை; தளை - கட்டு. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் வரும் தளை ஏழாம். (2) ஒரு சீர் தன் சீரோடு ஒன்றி வருவதனால் தோன்றுந் தளைகள் நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை என நான்காம். |
|
(பி - ம்.) 1. தன்சீர். |