உறுப்பியல் 'தண்சீர் தனதொன்றிற்'

33

 
     நிற்பப் பிறிதாகி வருஞ்சீர் முதலசையோ டொன்றுவதூஉம் தன்றளையே, (3)
சிறப்பின்றாயினு மெனக் கொள்க.
 
     'வஞ்சி வண்சீர் (4) விகற்பமும் வஞ்சிக்குரித்து' எ - து, வஞ்சியுரிச்சீர் நிற்பத்
தன்வருஞ்சீர் முதலசையோ டொன்றாத தூஉம் ஒன்றாத வஞ்சித்தளையாம் எ - று.
 
     'வண்சீர்' என்று சிறப்பித்த வதனால் வஞ்சியுரிச்சீர் நின்று பிறிதாகி வருஞ்சீர்
முதலசையோடு ஒன்றாததூஉம் ஒன்றாத வஞ்சித்தளையே. சிறப்பின்றாயினு எனக்
கொள்க.
 
     'வல்லோர் வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்'  எ - து
வெண்பாவுரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாம்
எ - று.
 
     'வல்லோர் வகுத்த' என்று மிகுத்துச் சொன்னவதனால் வெண்பா வுரிச்சீர் நிற்பப்
பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் கலித்தளையே, சிறப்பின்றாயினும்
எனக் கொள்க.
 
     'வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும்' எ - து
ஆசிரியவுரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் இயற்சீர்
வெண்டளையாம் எ - று.
 
     'ஒண்சீர்' என்று சிறப்பித்த வதனால் ஆசிரிய வுரிச்சீர் நின்று பிறிதாகி வருஞ்சீர்
முதலசையோடு ஒன்றாததூஉம் இயற்சீர் வெண்டளையே, சிறப்பின்றாயினுமெனக்
கொள்க.
 
  'ஒண்ணுதலே' எ - து. மகடூஉ முன்னிலை.
'இயற்சீர் ரிரண்டு தலைப்பெய றம்முள்
விகற்ப மிலவாய் விரவி நடப்பின்
அதற்பெய ராசிரி யத்தளை யாகும்'

'இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள்
விகற்ப வகையது வெண்டளை யாகும்'
 

     (3) எந்தச்சீர் நின்றதோ அந்தச்சீரே பின்னும் வந்து ஒன்றுவதும் ஒன்றாததும்
சிறப்புடைத் தளையாம். நின்றசீர் அன்றி வேற்றுச்சீர் வந்து ஒன்றுவதும் ஒன்றாததும்
சிறப்பில் தளையாம்.

      (4) விகற்பம் - வேறுபாடு. ஒன்றி வராமல் வேறுபட்டு வருவது விகற்பமாம்;
ஒன்றாத வஞ்சித்தளை, இயற்சீர் வெண்டளை, கலித்தளை இம் மூன்றும் விகற்பமாகி
வந்தவை.