| 'உரிச்சீ ரதனு ளுரைத்தவை யன்றிக் கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே' 'வெண்சீ ரிறுதியி னேரசை பின்வரின் வெண்சீர் வெண்டளை யாகு மென்ப' 'வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக் கண்டன வெல்லாங் கலித்தளை யாகும்' 'தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத் தொன்றினு மொன்றா தொழியினும் வஞ்சியின் பந்த மெனப்பெயர் பகரப் படுமே' |
என்றார் காக்கைபாடினியாரும் எனக் கொள்க. |
(10) |
--- |
தளைகட்கு உதாரண முதனினைப்பு |
| 11. திருமழை யுள்ளா ரகவல் சிலைவிலங் காகும்வெள்ளை மருளறு வஞ்சிமந் 1தாநில மென்பமை தீர்கலியின் தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப துரிமையின் கண்ணின்மை யோரசைச் சீருக் குதாரணமே. |
இ - கை. அத்தளைகளான் வந்த இலக்கியங்களுக்கு முத னினைப்பு உணர்த்.....று. |
'திருமழை யுள்ளா ரகவல்' எ - து : |
அகவல் |
| '(1) திருமழை தலைஇய விருணிற விசும்பின் 2விண்ணதி ரிமிழிசை கடுப்பப் 3பண்ணமைத் தவர்தேர் சென்ற வாறே.' |
இது நிரையொன்றாசிரியத் தளையான் வந்த செய்யுள். |
அகவல் |
| '(2) உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை அலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் |
|
(1) 'திருமழை....பண்ணமைத்' மலைபடு. 1-2. திருமழை - செல்வத்தை யுண்டாக்கும் மழை. இமிழ் - முழங்கும். கடுப்ப - ஒப்ப. பண்ணமைந்து - அலங்கரிக்கப்பெற்று. தேரின் அதிர்ச்சிக்கு மேகத்தின் இசை உவமை. 'பண்ணமைந் தவர்தேர்' காறும் நிரையொன்றாசிரியத்தளை. (2) உள்ளார் கொல் - நினையாரோ. சிலம்பி பொதி - சிலந்தியின் நூலார் மூடப்பட்ட. முதலடி நேரொன் றாசிரியத் தளை. |
|
(பி - ம்.) 1. தாநிலம் வந்துமை, 2. மண்ணதி, 3. பண்ணமைத். |