உறுப்பியல் 'திருமழையுள்ளார்'

35

 
துகில்பொதி பவள மேய்க்கும்
அகில்படு கள்ளியங் காடிறந் தோரே.'
 

(ஐங். தனிப். 2)
 

இது நேரொன்றாசிரியத் தளையான் வந்த செய்யுள்.
 
     'சிலை விலங்காகும் வெள்ளை' எ - து :
 

நேரிசை வெண்பா
 

  (3) சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு
தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ
கார்மாலை கண்கூடும் 4போது.'
      
இது வெண்சீர் வெண்டளையானும் இயற்சீர் வெண்டளை யானும் வந்த செய்யுள்.
 
     'மருளறு வஞ்சி மந்தாநிலம்' எ - து:
 

வஞ்சிப்பா
 

  '(4) மந்தாநில 5மருங்கசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசையெனவாங்
கினிதி னொதுங்கிய விறைவனை
மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே.'
 
இது (5) மயக்கமற வகுத்த வஞ்சித்தளையுள் ஒன்றியதூஉம் ஒன்றாததூஉம் வந்த
செய்யுள்.
 

     (3) சில விலங்கு - வில் தோற்றோடுதற்குக் காரணமான. ஒசிய - வளைய.
விலங்கிற்று - தழுவுதலினின்றும் நீங்கியது. கார்மாலை - கார்காலத்து மாலை நேரம்.

     (4) மந்தாநிலம் - தென்றல். இறைவன் - அருகபரன். முதலிரண்டடிகளில் ஒன்றிய
வஞ்சித்தளையும் மூன்றாமடியில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்துள்ளன. 'எனவாங்கு'
தனிச்சொல். இனிதி.....மகிழ்ந்தே:' சுரிதகம். வஞ்சிப்பா தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று
இறுவது.

      (5) மயக்கமற வகுத்த வஞ்சித்தளை - வஞ்சி யுரிச்சீரோடு வஞ்சியுரிச்சீரே
புணருவதனால் வருந் தளை; மயக்கம் - கலப்பு. மயக்கமில்லாத கலித்தளை
என்பதற்கும் இங்ஙனமே கொள்க. இவ்வஞ்சிப்பாவின் முதன் மூன்றடிகளிலும்
வஞ்சியுரிச்சீர்களே வந்துள்ளமை காண்க.
 

     (பி - ம்.) 4. போழ்து. 5. வந்தசைப்ப.