['மருளறு' என்றதனால் வஞ்சித்தளையால் வந்த வஞ்சிப்பாச் சிறப்புடைத்து.] |
'மைதீர் கலியின் தெரிவுறு பந்தம்.....செல்வப் போர்க் கதக் கண்ணன்' எ - து: |
கலிப்பா |
| '(6) செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்த் தொளித்ததே.' |
இது மயக்கமில்லாத கலித்தளையான் வந்த செய்யுள். |
['மைதீர்கலி' யென்றவதனாற் கலித்தளையான் வந்த கலிப்பா (7) சிறப்புடைத்து.] |
| 'நல்லாய்' எ - து. மகடூஉ முன்னிலை. 'உரிமையின் கணின்மை யோரசைச் சீருக்கு உதாரணமே:'c |
எ - து : |
வஞ்சி விருத்தம் |
| 'உரிமை யின்க ணின்மையால் அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையாற் பெருமை 6கொன்ற வென்பவே.' |
|
இம் (8) முச்சீரடி வஞ்சி விருத்தத்துள் 'மழை' என்னும் நிரையசைச்சீர் இயற்சீரேபோல நின்று, வருஞ்சீர் முதலசையோடு (6) ஆழி - சக்கரப்படை. முல்லைத்தார் - வெற்றிமாலை ; பு, வெ. 222. முன்பெல்லாம் வெற்றியையே பெற்றவர் என்றபடி, கொண்மூ - மேகம். மருமம் - மார்பு ஆழியை யானைமேல் எறிதல்: 'கொல்யானை யணிநுத லழுத்திய வாழிபோல்' (கலி. 134.) (7) 'செல்வப்போர்' என்ற இச் செய்யுளே சிறப்புடைய கலிப்பாவுக்கு உதாரணம். (8) வஞ்சிவிருத்தம் முச்சீரடியானே வருவது ஆதலின் 'முச்சீரடி' என்று இங்கே மிகுத்துக் கூறியது என்னையெனின், அசை சீராக வருதல் அரிதாகலின், 'இருசீரடியான் வந்த வஞ்சித்துறையோ இது' என்று மயக்கம் கொள்ளாமைக்கு என்க. |
|
(பி - ம்.) 6. பொன்றுமென்பவே. |