ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளை யாயினவாறும், 'செய்' என்னும் அசைச்சீர் இயற்சீரேபோல நின்று வருஞ்சீர் முதலசையோடு நேரசையாய் ஒன்றினமையின் நேரொன்றாசிரியத் தளையாயினவாறும் கண்டுகொள்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. |
['உதாரணம்' என்பதனை இறுதிநிலை விளக்கெனக்கொள்க.] |
(11) |
---- |
அடி |
| 12. குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர் அறைதரு காலை யளவொடு நேரடி யையொருசீர் நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோட் கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே. |
இ - கை. அத் தளைகளான் வந்த அடிகளது பெயர் வேறுபாடு உணர்த்....று. 'குறள் இரு சீரடி' எ - து. இருசீரான் வந்த அடி. (1) குறளடி யெனப்படும் எ - று. 'சிந்து முச்சீரடி' எ - து. முச்சீரான் வந்த அடி சிந்தடி யெனப்படும் எ - று. |
'நாலொருசீர் அறைதரு காலை அளவொடு நேரடி' எ - து. நாற்சீரான் வந்தஅடி அளவடியென்றும் நேரடியென்றும் வழங் கப்படும் எ - று. [அளவடியெனினும் நேரடியெனினும் ஒக்கும்] 'அளவொடு நேரடி என்றவதனால் அளவடி மற்றை யெல்லா வடியினும் சிறப்புடைத்து. 'ஐயொருசீர் நிறைதரு (2) பாதம் நெடிலடியாம்' எ - து. ஐஞ்சீரான் வந்தவடி நெடிலடியென்று வழங்கப்படும் எ - று. |
|
(1) குறளடி முதலியன காரணக் குறியின : மக்களில் தீரக் குறியானைக் 'குறளன்' என்றும், அவனின் நெடியானைச் 'சிந்தன்' என்றும், குறியனும், நெடியனும் அல்லாதானை 'அளவிற் பட்டான்' என்றும், அவனின் நெடியானை 'நெடியான்' என்றும், தீரநெடியானைக் 'கழியநெடியான்' என்றும் வழங்குவர் ஆதலின் இவ்வடிகட்கும் இவ்வாறே பெயர் சென்றதெனக் கொள்க. (2) பாதம் - அடி. |