38

யாப்பருங்கலக் காரிகை

 
      'நெடுமன் பணைத்தோள் கறைகெழு வேற்கண் நல்லாய்' எ - து மகடூஉ
முன்னிலை.

      'மிக்க பாதம் கழிநெடிலே' எ - து. ஐஞ்சீரின் மிக்க சீரான் வந்த அடியெல்லாங்
கழி நெடிலடி எனப்படும் எ - று.
 
  (3) அகலம் உரையிற் கொள்க.

'குறளடி சிந்தடி யிருசீர் முச்சீர்
அளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர்
நிரனிறை வகையா னிறுத்தனர் கொளலே'

'கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்
அறுசீர் முதலா வையிரண் டீறா
வருவன பிறவும் வகுத்தனர் கொளலே'
 
என்பவை யாப்பருங்கலமெனக் கொள்க. (சூ. 24. 25) 
 
 
'இருசீர் குறளடி சிந்தடி முச்சீர்
அளவடி நாற்சீர் 1ரைஞ்சீர் நெடிலடி
அறுசீர் கழிநெடி லாகு மென்ப'

'எண்சீ ரெழுசீ ரிவையாங் கழிநெடிற்
கொன்றிய வென்ப வுணர்ந்திசி னோரே'
 
என்றார் காக்கைபாடினியாரும்.
 
 
'(4) [குறளொரு பந்த மிருதளை சிந்தாம்
முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
மிக்கன கழிநெடி லென்றிசி னோரே'
 
என்றார் பிறருமெனக் கொள்க.]
 

(12)
 

----
 


     (3) விரிவான பொருளை யாப்பருங்கல விருத்தியிரையிற் கண்டு கொள்ளுக'
என்பது இத்தொடரின் பொருள்; காரிகை, 5-அடிக்.

      (4) இச்சூத்திரம் தளையின் கணக்கைக் கொண்டு குறளடி முதலியவற்றை
விளக்குகின்றது; பந்தம் - தளை.
 

     (பி - ம்.) 1. ரறுசீரதனி, னிழிபு நெடிலடி யென்றிசி னோரே.