அடிகளுக்கு உதாரண முதனினைப்பு |
| 13. திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின் இரைக்குங் கணிகொண்டமூவடி வோடிடங் கொங்குமற்றுங் கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே. |
இ - கை. அவ்வடிகளான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று. திரைத்த விருது குறள் சிந்து எ - து : |
வஞ்சித்துறை |
| '(1) திரைத்த சாலிகை நிரைத்த போனிரைந் திரைப்ப தேன்களே விரைக்கொண் மாலையாய்' |
(சூளா. சீயவதை. 172.) |
இது குறளடியான் வந்த செய்யுள். |
வஞ்சிவிருத்தம் |
| 'இருது வேற்றுமை யின்மையாற் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது1 வேற்றடங் கையினாய்' |
(சூளா. சீயவதை. 170.) |
இது சிந்தடியான் வந்த செய்யுள். 'அளவடி தேம்பழுத்து' எ - து : |
கலிவிருத்தம் |
| '(2) தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் |
|
(1) திரைத்த சாலிகை - சுருங்கிய கவசம். நிரந்து - வரிசையாகி. தேன்கள் இரைப்ப - வண்டுகள் ஒலிப்ப. விரை - நறுமணம். மாலையில் படிந்துள்ள வண்டுகளுக்கு மாலைக்கிடும் கவசம் உவமை. (2) இனியநீர் மூன்று - கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்னும் மூன்றும் கலந்து ஊறிய நீர். அளிந்தன - கனிந்தனவாகிய. வேரி - தேன். |
|
(பி - ம்.) 1. வேற்றடக்கையினாய். வேற்றடங் கண்ணினாய். |