40

யாப்பருங்கலக் காரிகை

 
மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமுந்
தாம்பழுத் துளசில தவள மாடமே.'
 

(சூளா. நகரச். 14.)

     இது அளவடியான் வந்த செய்யுள்.
 
     'விரிக்கு நெடிலடி வென்றான் வினையின்' எ - து :
 

விருத்தக் கலித்துறை
 

  '(3) வென்றான் வினையின் 2றொகையாய விரிந்துதன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றுஞ்
சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.'
 
     இது நெடிலடியான் வந்த செய்யுள்.
 

(சூளா. காப்பு.)
 

     'வேல்நெடுங் கண்ணி' எ - து. மகடூஉ முன்னிலை.
 
     'இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்கு மற்றும்.......கழிநெடிலே'
எ - து :
 

ஆசிரியவிருத்தம்

  'இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெய ரினவண்டு புடைசூழ
  நுரைக்க ளென்னுமக் 3குழம்புக டிகழ்ந்தெழ நுடங்கிய விலயத்தால
  திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக கரைமேல்வைத்
  தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே'

(சூளா. கல்யாணச். 51.)
 

என்பது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
 

     (மதுத்தண்டு - கள்ளைப் பொதிந்து வைத்திருக்கும் மூங்கிற் குழாய்; 'நீடமை
விளைந்த தேக்கட் டேறல்' (முருகு 195.) 'தழங்கு வெம்மதுத் தண்டும்' (சீவக. 863)
தவளம் - வெண்மை.

      (3) வினையின் தொகை ஆய வென்றான் : வெங்கண் வினைப்பகை வினி
வெய்த..... அருணெறி நடாத்திய வாதி' (கா. 9. மேற்.) 'திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி':
வெம்புஞ் சுடரிற் சுடருந் திருமூர்த்தி' (சீவக. 2); 'பரிதியி னொருதர னாகி.......உயர்ந்த
அற்புத மூர்த்தி' (நன். சிறப். 3-5.)

      (4) இரைக்கும் - ஒலிக்கும். பறவைகள் : அறுகாற் பறவை என்பது வண்டுக்குப்
பெயர். இலயம் - கலப்பு. இது கங்கையின் வருணனை.
 

     (பி - ம்.) 2. றொகை நீங்க, றொகையாக, றொகையாகி 3. குழம்பு
கொண்டுதீர்ந்தெழ.