42

யாப்பருங்கலக் காரிகை

 
வடக்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை
சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன்
தடக்கொ டாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர்
தமக்கு வெந்துயர் தவிர்க்குமே.'
 
     இஃது ஒன்பதின் சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
 

ஆசிரியவிருத்தம்
 

  'கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு
கூடி நீடு மோடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத
நாத வென்று நின்று தாழ
அங்க பூர்வ மாதி யாய வாதி நூலி
னீதி யோது மாதி யாய
செங்கண் மாலை காலை மாலை 7சேர்நர் சேர்வர்
சோதி சேர்ந்த சித்தி தானே.'
 
     இது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
 
     'மற்றும்' என்றதனாற் பதின்சீரின் மிக்க அடியான் வரப் பெறுவனவும் உளவெனக்
கொள்க. அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.
 
     (8) 'கரிக்கைக் கவான் மருப்பு ஏர்முலை மாதர்' எ - து மகடூஉ முன்னிலை.
 
     இக் காரிகையுள் மகடூஉ முன்னிலையை இரண்டிடத்தே சொல்லியதூஉம் 'விரிக்கு
நெடிலடி' யென்று சிறப்பித்ததூஉம் எண்சீரின் மிக்க சீரான் வந்த அடி சிறப்பிலவெனக்
கொள்க என்று அறிவித்தற்கெனக் கொள்க.
 
  'இரண்டு முதலா வெட்டீ றாகத்
திரண்ட சீரா னடிமுடி வுடைய
இறந்து வரினு மடிமுடி வுடைய
சிறந்த வல்ல செய்யு ளுள்ளே'
என்றார் காக்கை பாடினியார்.
 

(13)

---


     (8) கரிக்கை கவான் - யானையின் துதிக்கையைப் போன்ற துடை மருப்பு -
யானையின் தந்தம். ஏர் - அழகு.
 

     (பி - ம்) 7. சென்று.