உறுப்பியல் 'வெள்ளைக் கிரடண்டடி'

43

 

அடிவரையறை

  14. வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்
கெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகு மிழிபுரைப்போர்
உள்ளக் கருத்தி னளவே பெருமையொண் 1போதலைத்த
கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே.
     இ - கை. அவ்வடி வரையறையான் வந்த நான்கு பாவிற்கும் சிறுமை பெருமை
உணர்த்......று.
 
     (1) 'வெள்ளைக்கு இரண்டடி இழிபு' எ - து. வெண்பாவிற்கு இரண்டடியே சிறுமை
எ - று.
 
     'வஞ்சிக்கு மூன்றடி இழிபு' எ - து. வஞ்சிப்பாவிற்கு மூன் றடியே சிறுமை எ - று.
 
     'மூன்றகவற்கு இழிபு' எ - து. ஆசிரியப்பாவிற்கு மூன்றடியே சிறுமை எ - று.
 
     'எள்ளப்படாக் கலிக்கு ஈரிரண்டு ஆகும் இழிபு' எ - து. கலிப்பாவிற்கு
நான்கடியே சிறுமை எ - று.
 
     ['இழிபு' எ - து சிறுமை எ - று.]
 
     'உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை' எ - து. நான்கு பாவிற்கும்
பெருமைக்கு எல்லை பாடுவோரது பொருண் முடிவு குறிப்பே, வரையறையில்லை
எ - று.
 
     'ஒண் போது அலைத்த கள்ளக் கருநெடுங்கண் சுரிமென் குழல் காரிகையே'
எ - து. மகடூஉ முன்னிலை.
 
     'எள்ளப்படாக் கலிக்கு' என்று சிறப்பித்தவதனால், (2) துள் ளலோசையிற் சிறிதும்
வழுவாது நாற்சீர் நாலடியால் வருவது தரவு கொச்சகக் கலிப்பா என்றும்,
துள்ளலோசையிற் சிறிது
 

     (1) வெண்பா வெள்ளையென்றும் வழங்கப்படும் ; 'வெள்ளைச் செந்துறை'
'செந்துறை வெள்ளை' போன்ற பெயர்களைக் காண்க.

      (2) துள்ள லோசை சிறிதும் வழுவாது வருதல் - கலித்தளையே அமைந்து
வருவது.
 

     (பி - ம்) 1. பேரதுலைத்த, போர்தொலைத்த