உறுப்பியல் `அறந்தா றிதுவென'          

45

 
வருவன வாசிரிய மில்லென மொழிப
வஞ்சியு மப்பா வழக்கின வாகும்,'
`நான்கா மடியினு மூன்றாந் தொடையினுக்
4தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே,'
5 உரைப்போர் குறிப்பினை 6 நீக்கிப் பெருமை
வரைத்தித் துணையென வைத்துரை யில்லென்
றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே.'
 
என்றார் காக்கை பாடினியாருமெனக் கொள்க.
 

(14)


      அடியினும் மூன்றாம் தொடையினும்' என்று வருவனவற்றுக்கும் இங்ஙனமே
பொருள் கொள்க.
 

     (பி - ம்) 4. தாழ்ந்த. 5. படைப்போர். 6. யன்றிப், நோக்கிப்.
 

---

அடிவரையறை உதாரண முதற்குறிப்பு

  15. அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு
`ருறித்தாங் குரைப்பின் முதுக்குறைந் தாங்குறை யாக்கலியின்
திறந்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை
2புறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே.
 
     இ.....கை. 3அவ்வடி வரையறையான் வந்த இலக்கியங் .....கட்கு முதனினைப்
புணர்த்.....று.
     `அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபு' எ - து :
 
  `அறத்தா றிதுவென வேண்டா சிலிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை' 

(குறள், 37.)

     இஃது இரண்டடியான் வெண்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. `அகவற்கு இழிபு
4குறித்தாங்கு உரைப்பின் முதுக்குறைந்தாம்' எ - து :
 
  `(1) முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.'
 

     (1) முதுக்குறைந்தனள் - முதற்பூப்படைத்து பருவம் பெற்றாள் என்றபடி.
முதுக்குறைதல் - அறிவு மிகுதல். மலையன் : ஒரு வள்ளல்; மலையமான் திரு
 

     (பி - ம்.) 1. குறித்தாறுரைப். 2. `புறத்தான் வரு. 3. அந்நான்கு பாவிற்கும்
அடிவரையான். 4. குறித்தாறுரைப்பின்.