கண் உயிரானும் ஒற்றானும் அளபெடுத்துத் தம்முள் ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத் தொடை எனப்படும் எ - று. |
'அழியாது' என்று மிகுத்துச் சொல்லியவதனால் நான்கு உயிரளபெடையும் இரண்டு ஒற்றளபெடையும் தம்முள் ஒன்றி வரத் தொடுப்பது சிறப்புடைத்தென்று உணர்க. தொடை விகற்பததுள் நான்கு உயிரளபெடையும் இரண்டு ஒற்றளபெடையும் தம்முள் மறுதலைப்படத் தொடுப்பினும் இழுக்காது. |
| 'முதலெழுத் தொன்றின் மோனை யெதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அஃதொழித் 7தொன்றின வாகு மென்ப' |
என்றார் பல்காயனார். |
| 'இறுவா யொப்பினஃ தியைபென மொழிப' |
என்றார் 8கையனார். |
| 'மொழியினும் பொருளினு முரணுதன் முரணே' |
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 40,) |
'அளபெடைத் 9தொடைக்கே யளபெடை யொன்றும்' என்றார் 10நத்தத்தனாரும் எனக் கொள்க. |
(16) |
|
(பி - ம்.) 7. தொள்றினாகு, 8. காக்கை பாடினியார், மயேச்சுரர். 9. தொடையே. 10. நற்றத்தனார். |
---- |
அந்தாதி, இரட்டை, செந்தொடை |
| 17. அந்த முதலாத் தொடுப்பதந் தாதி யடிமுழுதும் வந்தமொழியை வருவ திரட்டை வரன்முறையான் முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டாற் செந்தொடை நாமம் பெறுநறு மென்குழற் றேமொழியே. |
இ.....கை. அந்தாதித்தொடையும் இரட்டைத்தொடையும் செந்தொடையும் ஆமாறு உணர்த்..று. |
அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி' எ - து. அடிதோறும், ஓரடி இறுதிக்கண் நின்ற எழுத்தானும், அசையானும், |