உறுப்பியல் 'கந்தமடிவில்'

5

 
'வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச்
சிறப்பென்னும் பாயிர மாம்'
எனவும்,
 
'தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும்
எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்'
 
எனவும் சொன்னார் ஆகலின்,
 
     'கந்தமடிவில்..... தாழ்குழலே' என்பது - முருகு விரியும் மொய் மலர் அசோகின்
கீழ் 17 அருகன் றனது அடி வணங்கி எழுத்தும் அசையுஞ் சீரும் தளையும் அடியுந்
தொடையும் பாவும் பாவினமு மாமாறு உரைப்பன் தளிப்புரையுஞ் சிறுமெல்லடித்தகை
நெடுங்குழற் றையலாய் என்றவாறு. இது பொழிப்புரை யெனக் கொள்க. என்னை?
 
  'பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்
பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே'
 
என்றார் ஆகலின்.
 
     'கந்த மடிவில்......இணையடி யேத்தி' என வணக்கம் சொல்லப்பட்டது;
'எழுத்......வினங் கூறுவன்' என அதிகாரம் கூறப்பட்டது.
 
 
'வழிபடு தெய்வ வணக்கஞ் செய்து
மங்கல மொழிமுதல் 18வழுவற வகுத்தே
எடுத்துக் கொண்ட விலக்கண விலக்கியம்
இடுக்க ணின்றி யினிது முடியும்'
 
     இனி எழுத்து முதலாகிய எட்டினையுங் காரணக் குறியான் வழங்குமாறு:
 
  'எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்
தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
19 தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
 

     (பி - ம்) 17. அருகபரனை யடியிணை. 18 வகுத்தெடுத்துக்கொண்ட. 19. தட்டுற,