50

யாப்பருங்கலக் காரிகை

 
     சீரானும், அடியானும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது (1) அந்தாதித்தொடை
எனப்படும் எ - று.
 
     'அடிமுழுதும் வந்த மொழியே வருவது இரட்டை வரன் முறையான்' எ - து.
ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத்தொடை யெனப்படும்
எ - து.
 
     'வரன் முறையான்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஈற்றெழுத்தொன்று
குறையினும் இழுக்காது; அது நாற்சீரின் மிக்கு வரப்பெறாதெனக் கொள்க.
 
     'முந்திய மோனை முதலா முழுதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம்
பெறும்' எ - து. மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும் போலாமை
வேறுபடத் தொடுப்பது (2) செந்தொடை எனப்படும் எ - று.

 
     'முந்திய' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அசையுஞ் சீரும் தம்முள்
மறுதலைப்படத் தொடுப்பது சிறப்புடைத்தெனக் கொள்க.
 
     'நறுமென்குழல் தேமொழியே' எ - து. மகடூஉ முன்னிலை
 
  'அடியுஞ் சீரு மசையு மெழுத்தும்
முடிவு முதலாச் 1செய்யுண் மொழியினஃ
தந்தாதித் தொடையென் றறியல் வேண்டும்'
 
2 எனவும்.
 

     (1) இறுதியடியின் இறுதியும் முதலடியின் முதலும் ஒன்றாய் வருவது மண்டல
வந்தாதி. அங்ஙனம் வாராதன செந்நடை யந்தாதி ஒரு நூலுள் நின்ற கவியின் ஈறும்
வருங்கவியின் முதலும் ஒன்றிவருவதும் அந்தாதியே. அங்ஙனம் ஒருநூலுள் இறுதிச்
செய்யுளின் இறுதியும் முதற்செய்யுளின் முதலும் ஒன்றி வருவது மண்டலித்து
வந்ததாகும், இவ்வித முறையை நான்மணிமாலை, மும்மணிக்கோவை, அந்தாதி நூல்கள்
முதலியவற்றிற் காண்க.

      (2) காராட்டை வெள்ளாடு என்றல்போல் செம்மைப்படாத தொடையினைச்
செந்தொடை என்றார். செயற்கைத்தொடை விகற்பங்களை வேண்டாது சீர், அசை
முதலியவற்றால் இணங்கி வருவதால் செந்தொடையாயிற்று என்பாரும் உளர்.
 

     (பி - ம்.) 1. செய்யுளின். 2. என்றார் நத்தத்தனார். ஒரு சொலடி...... திரட்டை
யென்றார் மயேச்சுரர்.