உறுப்பியல் 'மாவும்புண் மோனை'

51

 
  'ஒருசொ லடிமுழுதும் வருவ திரட்டை'
 
எனவுஞ் சொன்னார் மயேச்சுரர்.
 
'சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற்
சொல்லியற் புலவரது செந்தொடை என்பர்'
 
என்றார் தொல்காப்பியனாரும் (பொருள். சூ. 412.) எனக் கொள்க.
 
  'அசையினுஞ் சீரினு 3மிசையினு மெல்லாம்
இசையா தாவது செந்தொடை 4தானே'
 
என்றார் 5காக்கை பாடினியார்.

(17)


     (பி - ம்.) 3. மடியினு. 4. யென்ப. 5. கையனார், பல்காயனார்.
 

----
 

தொடை விகற்பங்களுக்கு முதனினைப்பு

  18. மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய
ஓவிலந் 1தாதி யுலகுட னாமொக்கு மேயிரட்டை
பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் 2பணிமொழியே.
 
     இ.....கை. அடிமோனை முதலாகிய தொடைகளான் வந்த இலக்கியங்கட்கு
முதனினைப் புணர்த்....று
 
     'மாவும் புள் மோனை' எ - து :
 

ஆசிரியப்பா

(1) மாவும் புள்ளும் 3வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலை தொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடை
மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே.'
 

     (1) மா - விலங்கு. வதி - வழி. விரிந்த பூ என்றது மாலைக் காலத்தில் குவியும்
தாமரை முதலியவற்றை. கோதை இங்கே முல்லை மாலை. மாயோள் - மாமை நிறத்தை
யுடையவள்; பெண்களுக்கு அழகைத் தருவது இந்நிறம். வாடை துயர்தருதல் : குறுந்
103, 110, 240, 277, 317, 332.
 

     (பி - ம்) 1. தாதிக்குலகுட 2. பனிமொழியே. 3. வதுவையிற், வரிவயிற்.