52

யாப்பருங்கலக் காரிகை

 
     இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையான் அடிமோனைத்
தொடை.
 
     `இயைபு இன்னகை' எ - து.
 

ஆசிரியப்பா

  `(2) இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே
நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே
ஆடமைத் 4தோளி யூடலு மணங்கே
அரிமதர் மழைக்கணு மணங்கே
திருதுதற் பொறித்த திலதமு மணங்கே.'
 
     இஃது அடிதோறும் 5 இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுத்தமையான் அடியியைபுத்
தொடை.
 
     `வடியேர் எதுகைக்கு' எ - து:
 

வெண்பா

  `(3)வடியேர்க ணீர்மல்க வான்பொருட்குச் சென்றார்
கடியார் கனங்குழாய் காணார்கொல் காட்டுள்
இடியின் முழக்கஞ்சி யீர்க்கவுள் வேழம்
பிடியின் புறத்தசைத்த கை.'
 
     இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையான்
அடியெதுகைத் தொடை.
 
     `ஏவின் முரணும் இருள் பரந்து' எ - து;
 
 

`(4) 6 இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின்
நிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறை
இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னி னன்ன நுண்டா திறைக்குஞ்
 


     (2) கிளவி - சொல். அணங்கு - வருத்தம் தருவது சுணங்கு - தேமல்.
அமைத்தோளி - மூங்கிலைப்போன்ற தோள்களை யுடையவள்.

      (3) வடி - மாவடுவின் பிளவு - கண் - தலைவியின் கண்கள். கவுள் - கன்னம்.
இடியோசை கேட்ட வேழம் பிடி நடுங்குமே என்று அஞ்சி அப்பிடியின் முதுகைத்
தடவியது. சென்றார், கை காணார் கொல்.

      (4) மாநீர் - கடல். அணங்கு - வருத்திக் கொல்லும் தெய்வமகள்,
 

     (பி - ம்.) 4. தோளிக்கூடலு தோளிகூடலு. 5. இறுதிச் சீர்க்கண் நின்ற
எழுத்தானுஞ் சொல்லானும். 6. இருள்விரிந்.