உறுப்பியல் `மாவும்புண் மோனை'

53

 
  சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே.'
 
      இஃது அடிதோறும் 7முதற்கண்ணே மறுதலைப்படத் தொடுத்தமையான்
அடிமுரண்டொடை.
 
     `ஈண்டு அளபு ஆஅவளிய' எ - து :
 

பஃறொடை வெண்பா


(5) `ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ
டீஇ 3ரிரையுங்கொண் டீரளைப் பள்ளியுட்
டூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போ னறுநுதால்
ஓஒ வுழக்குந் துயர்.'
 
     இஃது அடிதோறும் 9முதற்கண் 10அளபெடை ஒன்றிவரத் தொடுத் தமையான்
அடியளபெடைத் தொடை.
 
     11 `ஓவிலாந்தாதி உலகுடனாம்' எ - து :
 

ஆசிரியப்பா

  (6) `உலகுடன் விளக்கு மொளிதிக ழவிர்மதி
மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
ஆசனத் திருத்த திருந்தொளி யறிவனவ்
வாசனத் திருந்த திருந்தொளி யறிவனை
யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே.'
 

     (5) ஆஅ அளிய - மிகவும் இரங்கத்தக்கன. அலவன் - நண்டு. பார்ப்பு - குஞ்சு.
ஈஇர் இரை - நுண்ணிய உணவு. ஈஇர் அளைப்பள்ளியுள் - ஈரத்தோடு கூடிய சேற்று
வளையுள். தூஉந்திரை - தூவுகின்ற அலைகள் - மேஎ வலைப்பட்ட - விரும்புதலாகிய
வலையிலகப்பட்ட. அலவன் துஞ்சாது, துயர் உழக்கும், அலவனும் பார்ப்பும் அளிய.

      (6) அறிவன் - அருகபரன். உலகு மாந்தரது என்ப. இச்செய்யுள் மண்டலவந்தாதி.
 

     (பி - ம்) 7. சொல்லானும் பொருளானும் முதற்கண்ணே. 8. ரிரைக் கொண். 9.
முதற்சீர்க்கண். 10. அளபெடுத் தொன்றி. 11. ஓவிலந்தாதிக்கு.