54

யாப்பருங்கலக் காரிகை

 
     இது (7) நான்கு 12 அந்தாதித் தொடையும் வந்த செய்யுள்.
 
     'ஒக்குமே யிரட்டை' எ - து :
 

சிந்தியல் வெண்பா

  '(8) ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
விளக்கினுட் சீறெரி யொக்குமே யொக்கும்
குளக்கொட்டிப் பூவி னிறம்.'
 
     இஃது ஓரடி முழுதும் ஒருசொல்லே வரத் தொடுத்தமையான் இரட்டைத் தொடை.
 
     இறுதிச்சீர் ஏகாரத்தாற் குறைபடினும் இழுக்காது, இது நாற்சீரின் மிக்கு
வரப்பெறாதெனக் கொள்க.
 
     'பாவரும் செந்தொடை பூத்தவென்றாகும்' எ - து :
 

ஆசிரியப்பா

  '(9) பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.'
 
     இது மோனை முதலாகிய தொடையுந் தொடை விகற்பமும் போலாமை வேறுபடத்
தொடுத்தமையாற் செந்தொடை.
 
     'பணி மொழியே' எ - து. மகடூஉ முன்னிலை.
 

(18)
 

----
 


     (7) நான்கு அந்தாதித் தொடை : எழுத்தானும், அசையானும், சீரானும் அடியானும்
வந்த நான்குமாம்.

     (8) கொட்டிப்பூவின் நிறம் சிறிய எரி ஒக்கும்.

     (9) கொடிச்சி - குறிஞ்சிநிலப் பெண். இச்செய்யுள் தொடை விகற்பமங்களுள்
ஒன்றையும் பெறாமல் அகவலோசையோடு இயைந்து ஆசிரியப்பா ஆனவாறு காண்க.
 

     (பி - ம்.) 12. அந்தாதியும்.