முப்பத்தைந்து தொடை விகற்பம் |
| 19. இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவது மொன்றின்முற் றாமென்ப மற்றவையே. |
இ....கை. இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து 1 தொடை விகற்பமும் ஆமாறு உணர்த்.....று. |
இருசீர் மிசை இணையாகும்' எ - து. முத லிருசீர்க்கண்ணும் மோனை முதவாயின (1) ஐந்தும் வரத்தொடுப்பது இணைத்தொடை எனப்படும் எ - று. |
'பொழிப்பு இடையிட்டு' எ - து. முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது பொழிப்புத் தொடை எனப்படும் எ-று. |
'ஒரூஉவாம் இருசீர்இடை இட்டது' எ - து. நடுவிருசீர்க் கண்ணுமின்றி, முதற்சீர்க்கண்ணும் 2நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும் எ -று. |
'ஈறிலி கூழை' எ - து. இறுதிச்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும் எ - று. |
(2) 'முதல் இறுவாய் வருசீர் அயலில மேல் கீழ் வகுத்த மைதீர் கதுவாய்' எ - து. |
முதலயற் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத்தொடுப்பது மேற்கதுவாய் |
|
(1) ஐந்தும் : மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை என்னும் ஐந்தும். (2) 'முதல் வருசீர் அயலில மேல்வகுத்த கதுவாய், இறுவாய் வருசீர் அயலில கீழ்வகுத்த கதுவாய்' என்று நிரனிறை விரித்துப் பொருள் கொள்ளப்பட்டது. |
|
(பி - ம்.) 1. தொடையுந் தொடை விகற்பமும், தொடையுமாமாறு, 2. இறுதிச்சீர்க்கண்ணும். |