என்றும் ஈயற்றற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத்தொடுப்பது கீழ்க்கதுவாய் என்றும் வழங்கப்படும் எ - று. |
இது நிரனிறை எனக் கொள்க. என்னை? |
| 'கடையயன் முதலயல் கதுவாய் கீழ்மேல்' |
என்றார் 3அவிநயனார். |
முதலயற் சீர்க்கண் இல்லாததனைக் கீழ்க்கதுவாய் என்றும், ஈற்றயற் சீர்க்கண் இல்லாததனை மேற்கதுவாய் என்றும் 4 வேண்டினார் கையனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு, 'மைதீர் கதுவாய்' என்று விதப்புரைத்தாரெனக் கொள்க. |
'வருசீர் முழுவதும் ஒன்றின் முற்றாம்' எ - து 5 நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது முற்றுத் தொடை எனப்படும் எ - று. |
'மற்றவையே' என்பது இறுதி விளக்கெனக் கொள்க. |
'சீர் முழுவதும் ஒன்றின் முற்றாம்' என்னாது 'வருசீர் முழுவதும்' என்று சிறப்பித்தது, இணைமோனை முதலாகிய (3) முப்பத்தைந்து தொடை விகற்பமும் அளவடிக் கண்ணே இவ்வாறு வழங்கப்படும் என்பதூஉம், இணையியைபு முதலாகிய விகற்பமும் இறுதிச்சீரே முதற்சீராகக் கொண்டு வழங்கப்படும் என்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க. |
இயைபுத் தொடைக்கு ஏழு விகற்பமும் இறுதிச்சீர் முதலாகக் காட்டினார் கையனார் முதலாகிய ஒரு சார் ஆசிரியரெனக் கொள்க. |
|
(3) முப்பத்தைந்து தொடை விகற்பமாவன : மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்தனுள் ஒவ்வொன்றும் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் ஏழனோடும் உறழ மொத்தத்தில் (7 x 5 = 35) முப்பத்தைந்தாதல் காண்க. இவற்றினோடு அடிமோனை முதலிய ஐந்தும் அந்தாதி, இரட்டை, செந்தொடை என்ற மூன்றும் கூட்டத் தொடை விகற்பங்கள் நாற்பத்து மூன்றாயின என்க. |
|
(பி - ம்.) 3. பிறருமெனக் கொள்க. 4. சொன்னார், வழங்குவர். 5. எல்லாச் சீர்க்கண்ணும். |