| 'மோனை யெதுகை முரணியை பளபெடை பாத மிணையே பொழிப்போ டொரூஉத்தொடை கூழை கதுவாய் மிசையதூஉங் கீழதூஉஞ் சீரிய முற்றொடு சிவணுமா ரவையே,' 'இருசீர் மிசைவரத் தொடுப்ப திணையே,' 'முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே,' 'சீரிரண் டிடைதபத் தொடுப்ப தொரூஉத்தொடை,' 'மூவொரு சீரு முதல்வரத் தொடுப்பது கூழை யென்மனார் குறியுணர்ந் தோரே,' 'முதலயற் சீரொழித் தல்லன மூன்றின் மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே,' ஈற்றயற் சீரொழித் தெல்லாந் தொடுப்பது கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்,' 'சீர்தொறுந் தொடுப்பது முற்றெனப் படுமே' |
(யா. வி. சூ. 44, 42-48.) |
என்றார் ஆகலின் |
(19) |
--- |
தொடை விகற்பங்கட்கு உதாரண முதனினைப்பு |
| 20. மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற் கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன வினிமுரணிற் கான விகற்பமுஞ் சீறடிப் பேர தளபெடையின் றாள விகற்பமுந் தாஅட்டாஅ மரைபென்ப தாழ்குழலே. |
இ - கை. இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து தொடை விகற்பங்களான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று. |
'மோனை விகற்பம் அணிமலர்' எ - து : |
ஆசிரியப்பா |
'(1) அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி (இணைமோனை) அரிக்குரற் கிண்கிணியரற்றுஞ் சீறடி (பொழிப்பு) |
|
(1) கவற்றி - வருந்தச்செய்து. அரிக்குரல் கிண்கிணி - தவளையைப்போல் ஒலிசெய்கின்ற கிண்கிணி என்ற அணி; 'தவளைவாய பொலன்செய் கிண்கிணி |