| அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி (ஒரூஉ) அகன்ற வல்கு லந்நுண் மருங்குல் (கூழை) அரும்பிய கொங்கை 1யவ்வளை யமைத்தோள் (மேற்கது) அவிர்மதி யனைய திருநுத லரிவை (கீழ்க்கது) அயில்வே லனுக்கி யம்பலைத் தமர்ந்த (முற்று) கருங்கய னெடுங்க ணோக்கமென் றிருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே.' |
இதனுள் இணைமோனை முதலாகிய ஏழு விகற்பமும் முறை யானை வந்தவாறு கண்டுகொள்க. |
'மொய்த்துடன் ஆம் இயைபிற்கு எ - து': |
ஆசிரியப்பா |
| (2) 'மொய்த்துடன்றவழு முகிலேபொழிலே (இணையியைபு) மற்றத னயலே முத்துறழ் மணலே (பொழிப்பு) நிழலே யினியத னயலது கடலே (ஒரூஉ) மாதர் நகிலே வல்லே யியலே (கூழை) வில்லே நுதலே வேற்கண் கயலே (மேற்கது) பல்லே தளவம் பாலே சொல்லே (கீழ்க்கது) புயலே குழலே மயிலே யியலே (முற்று) அதனால் இவ்வயி னிவ்வுரு வியங்கலின் எவ்வயி னோரு மிழப்பர்தந்2நிறையே.' |
இதனுள் இணையியைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. |
'ஏனை யெதுகைக் கினம் பொன்னி னன்ன' எ - து : |
|
(குறுந்.148) அகற்றி - வென்று. அந்நுண், அவ்வளை : அ - அழகு, அமை - மூங்கில், அனுக்கி, அலைத்து - வருத்தி. சிந்தையை அடி, அல்குல், மருங்குல், கொங்கை தோள். நுதல் அரிவை நோக்கம் திறைகொண்டன. இது தலைவன் பாங்கனுக்குக் கூறியது. (2) வல் - சூதாடு கருவி. தளவம் - முல்லை. இவ்வயின் - இத்தகைய சிறந்த இடத்தில்; இடச்சிறப்பு : 1 - 3 அடி. இவ்வுரு - இத்தகைய சிறந்த உரு; உருச் சிறப்பு : 4-7 அடி, இது பாங்கன் கூற்று; செவ்வி செப்பல். |
|
(பி - ம்.) 1. அய்வளை. 2. நிலையே. |