| அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு 20 தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை பாவி நடத்தலிற் பாவே பாவொத் தினமாய் நடத்தலி னினமெனப் படுமே' |
21 என்றார் ஆகலின். |
| பந்தம் எனினும் தளை எனினும் ஒக்கும். என்னை? 'பகுத்தெதிர் நிற்றலிற் பந்தந் தளையென வகுத்தனர் மாதோ வண்டமி ழோரே' |
என்றார் ஆகலின். |
'பல்லவத்தின் சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே' என்பது பகடூஉ முன்னிலை. |
ஏகாரம் ஈற்றசை யேகாரம். |
(1) |
அவையடக்கம் |
| 2. (1) தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல் யானா நடாத்துகின் றேனென் (2) றெனக்கே நகைதருமால் ஆனா வறிவி னவர்கட் கென் னாங்கொலென் னாதரவே. |
இ - கை. 1 நூலினது பெருந்தன்மையும் ஆசிரியனது பெருந் தன்மையும் தனது உள்ளக் குறைபாடும் உணர்த்திய முகத்தான் அவையடக்கம் உணர்த்.....று. |
[தேன் நிறைந்த மணங்கமழ்கின்ற வேப்ப மாலையைத் தரித்த பாண்டியன் கேட்கத் தெளிந்த அருவி நீரையுடைய சந்த |
|
(1) மீனவன் பாண்டியன்; கேட்ப - கேட்கத் தக்கதாக. கன்னி - அழிவின்மை. நூல் - இலக்கணம். நடாத்துதுல் - நிகழ்த்துதல் ; 'நவநீத னடத்தினனே' (நவநீதப் சிறப்.). என் ஆதரவு எனக்கே நகைதரும்; அறிவின் அவர்கட்கு என்னாங் கொல்?' பாண்டியன் அகத்தியர்பால் நூல் கேட்டமை அன்றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ் கேட்டோன்' (பாண்டிக்.) (2) 'நன்னா வலர்முக நகைநாணாமே, என்னாலியன்றவை யியற்று மிந்நூலுன்' (நன். சங்கர, உரைச்சிறப. 15-6) |
|
(பி - ம்.) 20. தொடுத்தன் முதலாயின. 21. எனவரும். : நூற்சிறப்பும் ஆசிரியரது. |