செய்யுளியல் 'வளம்பட வென்பது'

67

 
மலர்கொண் டேத்தி வணங்குநர்
பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே.'
 
     இஃது ஒன்றாத வஞ்சித் தளையான் வந்தமையால் அகவற் றூங்க லோசை.
 
 
  'மந்தாநிலம்..........மகிழ்ந்தே.'
 

(கா. 11. மேற்.)

     இது பலதளையும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் தூங்க லோசை.]
 
     13 இவற்றிற்கு இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க.
 

1


     (பி - ம்.) 13. இவற்றுக்கு விருத்தி யாப்பருங்.

----

உதாரண முதனினைப்பு

  22. வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குகாரணஞ்செங்
களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோற்
றுளங்கிடை 1மாதே சுறமறி தொன்னலத் தின்புலபன்
2றுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக் குதாரணமே.
 
     இ - கை. அவ்வடியானும் ஓசையானும் வந்த இலக்கியங்கட்கு
முதனினைப்புணர்த்....று.
 
     'வளம்பட வென்பது வெள்ளைக்கு' எ-து :
 
  '(1) வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை
அளந்தன போக மவரவ ராற்றான்
விளங்காய் திரட்டினா ரில்லைக் - களங்கனியைக்
காரெனச் செய்தாரு மில் ;
 

(நாலடி. 103)
 

     இஃது அளவடியானும் செப்பலோசையானும் வந்தமையான் வெண்பா.
 

     (1) வளம்பட - செல்வம் முதலியவற்றால் பெருமைபெற. போகம். சுகங்கள்.
ஆற்றான் அளந்தன - ஊழ்வினையால் அளவு செய்யப்பட்டன. விளங் - காயும்
களங்கனியும் விதைவிதை வழியே பின்பும் அப்படிப் பலித்தல் அல்லது திரளவும்
கறுக்கவும் செய்தாரில்லை.
 

     (பி - ம்.) 1. மாதர். 2. றுளங்கொண்டு.